பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/461

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

449



மானுடம் இந்தப் புவியை நடத்த அறிவு என்ற கருவியைப் பெற்றாக வேண்டும். அறிவை "கருவி” (Instrument) என்று திருக்குறள் கூறுகிறது. தகவல்களின் தொகுப்பு அறிவு அல்ல. அறிவு ஒரு கருவி. வாழ்க்கையைத் துன்பத்திலிருந்து பாதுகாக்கும் கருவி அறிவு.

"அறிவு அற்றம் காக்கும் கருவி"

என்பது திருக்குறள். இந்த அறிவைத் தேடவேண்டும். நல்லறிவு எந்த மூலையில் இருந்தாலும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தேடிச்சென்று அடைதல் வேண்டும். நபிகள் பெருமான் "சீனத்திலாயினும் அறிவை அடையத் தவறாதே" என்றார். அறிவு மனிதனை, மனித குலத்தைத் துன்பத்திலிருந்து துயரங்களிலிருந்து பாதுகாக்கும் கருவி என்பது திருக்குறள் கருத்து.

அறிவைப் பெறுதலுக்குரிய சாதனங்கள் பலப்பல. அவற்றுள் தலையாயது கல்வி. "கற்க" என்று திருக்குறள் கூறுகிறது. 'கற்க என்பது எக்காலத்துக்கும் இயைந்து நிற்கும் ஆணைச்சொல். "கற்க "கற்றுக்கொண்டே இருப்பாயாக" என்கிறது. கற்றல் என்பது ஒரு தொடர் பணி! இன்று பட்டம் பெறும் மாணவர்கள் தொடர்ந்து கற்க வேண்டும், வாழ்நாள் முழுதும் கற்க வேண்டும். ஆம்! ஒவ்வொருவரும் படைப்பாற்றல் மிக்க மனிதனாகும் வரையில் கற்க வேண்டும். கற்றல் என்பது நாள்தோறும் செய்யக்கூடிய இயல்பான பணி என்று கலித்தொகை கூறும். கற்க என்று அறிவுறுத்திய திருவள்ளுவர் "கசடறக் கற்பவை கற்க” என்று தொடர்ந்து கூறுகிறார். சிலர் கூறுவது போலப் பிழையின்றிக் கற்றலை 'கசடறக் கற்க” என்று திருவள்ளுவர் கூறியிருக்க மாட்டார். முன்னோடியான, வெற்றி பொருந்திய வாழ்க்கையை நடத்தவேண்டும். இதற்குத் தடையாகப் பல குற்றங்கள் ஆன்மாவில் பொருந்தியிருக்கின்றன. நமது முன்னேற்றத்திற்குத் தடையாக ஆன்மாவிடத்தில் அமைந்துள்ள குற்றங்கள் எவை எவை என்று