பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/464

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படித்துத் தேர்ச்சி பெறவேண்டும். கல்வியில் இந்த செயல்முறை அவசியமானது.

இன்றைய இந்தியா நெருக்கடியான, ஆனாலும் நிலையான முன்னேற்றத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்குப் பணி செய்யக்கூடிய் கடமை ஆர்வலர்களை, அறிவறிந்த ஆள்வினையுடையோரை நாடு அவாவிக் கொண்டிருக்கிறது. சுயநலமின்றி, முற்றாகக் கையூட்டு முதலிய பலவீனங்களில் சிக்காமல் நாட்டிற்கு ஊழியம் புரியும் சக்தியை இன்றைய இளையபாரதம் பெற வேண்டும். இது நமது வேண்டுகோள்! பிரார்த்தனை!

மண்புழுவைப் பாருங்கள்! மெளனமாக அந்த மண்புழு உழைப்பு இயற்றுகிறது. ஆனால், மானுடத்தின் வாழ்க்கையில் ஆரவாரம் மேம்படுகிறது. விளம்பர நெடியே அடிக்கிறது. விளம்பரம் வேறு, புகழ் வேறு. இன்றைய இளைஞர்களே புகழ் புரிந்து வாழுங்கள்! வேண்டாம் விளம்பரம்! இளையபாரதம் இன்புறு நலன்கள் அனைத்தும் பெற்று வாழ்க! இது நமது விருப்பம்; விழைவு; பிரார்த்தனை. ஆயினும், "இளைய நண்பர்களே! இன்பங்களைப் பெருக்கிக் கொள்வதிலிருந்து விடுதலை பெறுவீர்! வாழ்க்கைக்கு இலக்குகளை நிர்ணயிப்பீர்களாக குறிக்கோள் இதுவெனக் கூறிக்கொள்வீராக! நமது குறிக்கோள் எதிர்காலமாக அமையட்டும்! நமது குறிக்கோள் சொர்க்கம் அடைவதாகவோ, முக்தி அடைவதாகவோ அமைவதை விரும்பாதீர்கள்! நாம் வணங்க வேண்டிய முதல் தெய்வம், நமது நாட்டில் வாழும் மக்களே!” என்று விவேகானந்தர் அறிவுறுத்திய அறிவறிந்த ஆள்வினையை மேற்கொண்டு நாட்டை மேலும் மேலும் தற்சார்புடையதாக்குக!

"நாடென்ப நாடா வளத்தன”!

என்ற திருக்குறளுக்கு இசைந்த நாடாக நமது நாட்டை அமைத்திடுக. இந்தியாவை வருத்தும் அறியாமை, வறுமை,