பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/466

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

454

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஒன்று சேர்ந்து வீரியம் பெறுவோம்!
ஒன்று சேர்ந்து அறிவொளி பெறுவோம்!
எவரையும் வெறுக்காமல் இருப்போம்!
ஓம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!”

என்னும் பழைய உபநிஷத் வாசகத்தை நினைவு கூர்வோம்!

இந்தியாவின் ஒருமைப்பாடு இந்தியாவின் பலம். இந்தியாவை ஒரு வலிமையான நாடாக உருவாக்க முதல் தேவை இந்திய ஒருமைப்பாடு. இதனை வளர்த்துக் காத்துக் கொள்ள உறுதி கொள்வோம்.

இன்று இந்தியாவில் பொருளாதார நெருக்கடி இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது.இந்த சூழ்நிலையிலிருந்து தப்பப் புதிய பொருளாதாரக் கொள்கை மூச்சுவிட அனுமதிக்கிறது. ஆயினும் போதிய பயன் - இளையபாரதம் பயனுறத்தக்க வகையில் அமையுமா? "டங்கல்" எங்கு அழைத்துக் கொண்டு செல்லும் என்ற வினாக்குறிகள் இளையோரிடம் எழுவதை நம்மால் கேட்க முடிகிறது. அவர்களின் பெருமூச்சும் தெரிகிறது. ஆயினும் தளராதீர்! இந்தியாவைத் தற்சார்பான பொருளாதார நாடாக்கச் சபதம் ஏற்பீர்! சுரண்டும் பொருளாதாரக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்! உண்மையான சுதந்தரம், சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கும் சுயநலத்திற்கும் தொடர்பே இல்லை! ஆனால், இன்றுள்ள நிலை வேறு. சுதந்தரத்தின் பொருள் உணர்வீர்! சமத்துவ சாத்திரம் ஏற்பீர் கடின உழைப்பினை மேற்கொள்வீர்! புதியதோர் உலகம் அமைப்பீர்களாக. புறநானூற்று நெறியில் "பிறர்க்கென முயலும் நோன்பினை" நோற்பீராக!

இன்று நம்மை வருத்தும் பண மதிப்பீட்டுச் சமுதாயம், பண வீக்கம் முதலிய துன்பங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். நாட்டை நலிவுறச் செய்யும் கருப்புப் பணப் பொருளாதாரம் என்ற புற்று நோயிலிருந்து நாட்டைப்