பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விட்டன. இந்தக் கொடுமை சராசரி மனிதனிடத்தில் இல்லை! "மிக உயர்ந்த இடங்கள்” என்று சமுதாயம் எண்ணும் இடங்களே நெறியும் முறையும் இழந்து சமூக நீதிக்கு உலைவைத்து வருகின்றன. இன்று உயர்கல்வி கற்கும் மாணவர்களிடத்தில் சமுதாய வாழ்விலும் பொது வாழ்விலும் சமத்துவம் (Equality) சகோதரத்துவம் (Brother hood) சமூகநீதி (Social Justice) ஆகியவற்றின் மீது ஆவேசம் உண்டாகச் செய்து, இந்த உயர்ந்த கோட்பாடுகளுக்காகப் போராடும் குணத்தை உருவாக்கி வளர்க்கவேண்டும்.

இன்றையத் தலைமுறை மாணவர்கள், பல்கலைக்கழகக் கல்வி பெறும் மாணவர்கள் எக்கருத்தையும் ஆராய்ந் தறிந்து ஏற்கும் துணிவைப் பெறத்தக்க வகையில் பயிற்று விக்கப் பெறுதல் வேண்டும். ஓர் இளைய தலைமுறையை, புதிய வலிமையான வாழ்க்கையைக் கட்டுமானம் செய்யும் பணியைச் செய்ய உறுதி பூணுவோமாக!

***

ஆ. கல்விச் சீர்திருத்தம்

மதிப்புயர் நலஞ்சார்ந்த பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களே! பேராசிரியப் பெரு மக்களே!

இன்று மாலை, “கல்விச் சீர்திருத்தம்” பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். நமது நாட்டில் கல்விச் சீர்திருத்தம் என்று பேசத் தொடங்கினால், பல மணி நேரம் பேசுவதற்குச் செய்திகள் உண்டு, ஆயினும் காலத்தின் அருமை கருதிச் சில - செய்திகளை - அலையும், தங்களுடைய கவலைபடர்ந்த நினைவில் இருப்பவைகளை நினைவூட்டுவதே இந்தப் பேச்சின் நோக்கமாகும்.