பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நமது மாணாக்கர்களுக்கு நாம் வழங்கியுள்ள, அளித்துள்ள வாய்ப்புக்கள் என்ன? இன்றைய மாணாக்கர்கள் நம்முடைய தலைமுறையிலிருந்து - தலைமுறையினரின் வாழ்க்கையி லிருந்து எந்த முன்னுதாரணத்தை - படிப்பினையை எடுத்துக் கொள்வார்கள்? அன்புகூர்ந்து சிந்தனை செய்யுங்கள்!

சுதந்திரம் பெற்ற பிறகு நம்முடைய வாழ்க்கையில் 'தியாகம்' 'நேர்மை' - ஆகியன விடை பெற்றுக்கொண்டு விட்டன போலத் தோன்றுகிறது. இன்று நிலவும் சமுதாயம் பண மதிப்பீட்டுச் சமுதாயம். ஆதலால், இந்தச் சமுதாயத்தில் கல்வியோ, திறமையோ தகுதியைத் தருவதில்லை. இன்று எங்கும் பணமே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தப் பொருந்தாச் சூழ்நிலை, மாணாக்கர்களிடையில் மனமுறிவையே ஏற்ப்டுத்தியிருக்கிறது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

இன்றைய மாணாக்கர்கள் கடந்துபோன யுகம், வரும் யுகம் ஆகிய யுக சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களால் கடந்த யுகப் பெருமைகளைக் காணமுடியவில்லை. அந்தப் பழைய - பிரமிக்கத்தக்க வரலாறு தொடரவும் இல்லை. அதேபோழ்து தங்களுடைய போக்கினாலே தங்களுடைய எதிர்காலம் பழுதுறப் போகிறது; இருள் சூழப் போகிறது என்பதை அறிந்துணராமல் நிற்கும் மாணாக்கர்களின் நிலை இரக்கத்திற்குரியது. இந்த அபாயத்திலிருந்து நமது மாணாக்கர்களை - எதிர்கால இந்தியாவை பாதுகாக்கத் துணிவான முயற்சிகள் தேவை. இத்தகு முயற்சியில் ஈடுபடும் பொழுது மாணாக்கர்களின் ஈடுபாடு, நடத்தை மதிப்பு, சமூகம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டியன பற்றி எண்ணித் திட்டமிடல்வேண்டும்.

கல்விக் கூடங்கள் - வகுப்பறைகள்

முதலில் கற்பிக்கும் பணியில் நல்ல பயன்தரத்தக்க உத்திகளைக் கையாளவேண்டும். வாழ்க்கைக்கும் நடை