பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வகுப்பறையில் ஆசிரியர் செய்யும் பணியை, ஓர் ஒலி நாடாக்கூடச் செய்துவிடும் என்பதை உணர்தல் அவசியம். ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்குக் கற்பிக்கும் பாடத்தைப் பலகாலும் படித்து அந்தப் பாட நூற் கருத்தைச் செழுமைப்படுத்தப் பல நூல்களைக் கற்றல், பல ஆய்வுகள் செய்தல், சோதனை செய்தல் முதலியவற்றைச் செய்து தனது அறிவினைச் செழுமைப்படுத்திக் கொண்டால்தான், கற்பித்தலைத் திறமையாகச் செய்யமுடியும். உலகியலில் முறையான அலுவல் நேரம் மிகக் குறைவு ஆசிரியர்களுக்குத்தான். ஆசிரியர், சராசரி ஒரு நாளைக்கு 5% மணிநேரம் தான் பணி செய்கிறார். ஆண்டு ஒன்றுக்கு 200 நாள்கள்தான் பணி நாள்கள்! ஏன் இவ்வளவு குறைந்த நாள்கள் பணிக்கு வரையறை செய்யப்பட்டது? மற்ற பணிகள் எல்லாம் செய்யும் மணி நேர அளவுக்குச் செய்தால் போதும்! பள்ளி வகுப்பறையில் ஒரு மணி நேரம் கற்பிக்கும் பணி செய்ய வேண்டுமென்றால், அந்த ஆசிரியர் வகுப்பிற்கு வெளியேயும் குறைந்தது ஒரு மணிநேரமாவது உழைக்கவேண்டும். அதாவது கற்பிக்கும் பாடத்தைப் படித்தல், சிந்தித்தல், குறிப்புகள் தயாரித்தல், காட்டுவதற்குக் காட்சிப் பொருள்கள் தயாரித்தல் முதலிய பணிகள் உள்ளன என்பதைக் கருத்தில் கொண்டேயாம். ஆனால், இந்த உண்மையை ஆசிரியர்கள் உணர்த்திருக்கிறார்களா என்பது விளங்கவில்லை. அவர்கள் வகுப்பறை நேரத்தைத் தவிர மற்றநேரம் தங்களுக்குரியது என்று எண்ணி வீணாக்குகின்றனர். சிலர் அரசியல் இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு புனை பெயரில் பங்கேற்கின்றனர். மற்றும் சிலர் துணைத் தொழில்களை (வட்டிக்கடை முதலியன) செய்யத் தொடங்கிவிட்டனர். இவர்களுடைய மனப்போக்கில், ஆசிரியப் பணி இரண்டாம் இடத்திற்கு வந்துவிட்டது. சென்ற பல ஆண்டுகளில் ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் உயர அரசு கணிசமான அளவு ஊதியத்தை உயர்த்தி இருக்கிறது. இழலும் உயர்த்தவேண்டும் என்று