பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால், நம்முடைய சமுதாயத்தில் எந்தக் காலத்திலாவது கல்வி, சமுதாய மாற்றத்திற்கு உரிய கருவியாக இருந்ததாக நினைவில்லை. இருக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இல்லை! படித்தல்! பட்டம் பெறுதல், வேலை தேடுதல், வேலையைச் செய்யாமலே ஊதியம் பெறுதல் ஆகியன இன்றைய நடைமுறைகளாக-வாடிக்கைகளாக-ஆகிவிட்டது.

இன்று நூற்றுக்குத் தொண்ணூறு இளைஞர்கள் எத்துறையில் பட்டம் பெற்றாலும் அவர்கள் எங்கோ ஒரு அலுவலகத்தில், தொழிற்சாலையில் நாள்களை எண்ணி மாதக் கடைசியில் ஊதியம் வாங்கும் வேலையையே விரும்புகின்றார்கள்; விரும்பித் தேடி அலைகின்றார்கள். அது கிடைக்கும் வரை எந்த ஒரு வேலையையும் சுயமாகச் செய்ய முன்வரமாட்டேன் என்கிறார்கள். பொறுப்பையும் ஆபத்துக் களையும் சந்திக்கும் துணிவு அவர்களுக்கு இன்மையே இதற்குக் காரணம். இந்த நாட்டில் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கி வழங்கமுடியும். அதற்குரிய நிதி ஆதாரங்கள் கிடைப்பதில்லை. இந்தச் சூழ்நிலையை நமது இளைஞர்கள் உணர்ந்து தாமே தொழில் தொடங்கவும் பண்ணைகள் அமைக்கவும் முன்வரவேண்டும். சுதந்திரமாகச் சுய தொழில் செய்வதில் இன்பம் காணவேண்டும்.

நமது நாட்டின் கல்வித்தரம், அறிவின் ஆக்கம் ஆகியன தேசிய முன்னேற்றத்தில் வகிக்கும் பங்கு அதி முக்கியமானதொன்றாகும். இதற்கு ஆசிரியர்களே முக்கிய காரணமாக விளங்குகிறார்கள். நமது தேசத்தின் முன்னேற்றம் நமது ஆசிரியர்களையே சார்ந்தது. இன்று நமது நாடு முன்னேறுகிறதா? கடன் சுமை கூடுகிறது! பொதுத் துறைகள் இழப்பில் ஓடுகின்றன! கையூட்டுகள் மலிந்துவிட்டன. சமுதாய வாழ்வில் சாதி, மதங்கள் கொட்டமடிக்கின்றன! எங்குப் பார்த்தாலும் வன்முறை கிளர்ச்சி! அமைதியின்மை பொது வாழ்க்கையின் தரத்தில் ஒரு சரிவு! இவற்றிற்கெல்லாம் ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டாமா? அன்புகூர்ந்து