பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாற்றம் ஏற்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் இன்று நாம் நம்முடைய ஆசிரியர் சமூகத்திற்கு வசதிகளையும் வாய்ப்புக்களையும் வழங்கி ஊக்கம் தந்து பேணுதல் வேண்டும்.

இந்தியா வளரும் நாடு. இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. வறுமைக்கோட்டிற்குக் கீழ் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வாழ்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் அரசு தவிக்கலாம்; பெற்றோர்கள் கவலைப்படலாம். ஆயினும் ஆசிரியர்களுடைய தேவைகளை நிறைவு செய்ய, கொஞ்சம் காலம் பிடிக்கலாம் என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணரவேண்டும் என்பது நமது வேண்டுகோள்! அங்ஙனமின்றி ஆசிரியர்கள் மாறுபட்ட உணர்வில் பரபரப்புணர்வுடன் எரிச்சல் அடைகின்றனர். தங்களுடைய தேவைகளை மட்டுமே நினைவிற்கொண்டும், முன்வைத்தும் போராடத் தொடங்கி விடுகின்றனர். அவர்களைச் சுற்றியுள்ள மாணாக்கர்களையும் சுற்றுப்புறத்தையும் மறந்துவிடுகின்றனர். இந்த ஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளைப் புறக்கணித்துவிட்டு மாணாக்கர்களுக்குத் தவறான வழியைக் காட்ட முற்படுகின்றனர். பல்வேறு புதிய சிக்கல்களையும் தோற்றுவித்து விடுகின்றனர். ஆயினும் சமூகமாற்றத்தைக் கொண்டு வருவதில் ஆசிரியர்களுக்குள்ள ஈடுபாடு, திறமைகள் முதலியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வாய்ப்புக்களை வழங்கி ஊக்கமளிக்க வேண்டும். ஏன் எனில் வேறு எந்தப் பணியையும்விடச் சிக்கலானது, கடுமையானது ஆசிரியப் பணி என்பதை மறந்து விடுதல் - கூடாது. பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்களும் உளமாரத் தங்களுடைய உழைப்பை அர்ப்பணித்து ஒத்துழைப்புத் தரவேண்டும். காலத்தின் அருமை கருதி விரைந்து செயற்பாடுறுதல் வேண்டும்.

ஒரு பள்ளியின் செயற்பாடு கட்டாயத்தின்பாற்பட்டதாக அமையாமல், சுய விருப்பமும் ஆர்வமும் கலந்ததாக