பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இ. தாய்மொழியில் கல்வி

அன்புடைய பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் ச. முத்துக்குமரன் அவர்களே! பேராசிரியப் பெரு மக்களே !

இன்று கல்விச் சிந்தனைத் தொடரில் மூன்றாவது சொற்பொழிவு. இந்தப் பேச்சு கல்வி மொழி பற்றியதாகும். இன்று, கல்வி மொழி பற்றிய சிக்கல் இந்தியாவை - குறிப்பாகத் தமிழகத்தைக் குழப்பிக் கொண்டிருக்கும் சிக்கல் மட்டுமல்ல. அதிகக் கவலையைத் தரக்கூடியதும் ஆகும்!

இந்தியா ஒரு பெரிய நாடு! சற்றேறக்குறைய 380 மொழிகள் பேசப்பெறும் நாடு. நூற்றுக் கணக்கான மொழிகளில் பதினெட்டு மொழிகளே தேசிய மொழிகள் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. இவற்றுக்கும் இந்தி, இந்திய நாட்டு மக்களை இணைக்கும் மொழி என்ற அடிப்படையில் இந்திய நாட்டு அரசின் அலுவலக மொழியாகவும் இடம் பெற்றிருக்கிறது! ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இடம் பெற்றிருக்கிறது. ஆயினும் ஆங்கிலம் எத்தனை ஆண்டுகள் இணை ஆட்சி மொழியாக இருக்கும் என்ற வரையறை திட்டமாக இல்லை! தமிழ்நாட்டில் எழுந்த இந்தி எதிர்ப் புணர்வு, தமிழை வளர்க்கப் பயன்படாமல் ஆங்கிலத்திற்குச் சாதகமாக அமைந்துவிட்டது என்ற வருந்தத்தக்க உண்மையை உணர்த்தாமல் இருக்க இயலவில்லை!

சிந்தனைத் தெளிவுக்கு வாயில் கல்வி

மானுடம் வெற்றிபெறத் தரமான கல்வி தேவை. வகுப்பறையில் ஆசிரியர் - மாணாக்கர்களுக்கிடையே வினாவின் மூலம் கலந்து பயிலும் கல்வியே அறிவைத் தரமுடியும். தாய் மொழிப் பாட வகுப்பில் - தமிழ் மொழிப்பாட வகுப்பில் மாணாக்கர்கள் ஐயம் கொள்கின்றனர்; கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். ஆங்கில மொழி வழிக் கற்கும் பாடங்களில்