பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

71


பெரும்பாலும் வினாக் கேட்கப்படுவதில்லை. ஏன்? முதலில் பிழையில்லா ஆங்கிலத்தில் வினாக் கேட்கவேண்டுமே! மாணாக்கன் கேட்கும் வினாவில் இலக்கணப் பிழையிருந்தால் ஆசிரியர் அதைப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்வார்! மாணாக்கன் பாடு அழாக்குறையாக அமையும். கடைசி வரையில் ஆசிரியர் ஐயத்தைத் தெளிவிக்கமாட்டார். இதனால் கல்வி வளர்வதில்லை. ஐயங்கள் தெளிவதில்லை; அறிவு வளர்வதில்லை. இந்தக் குறை நீங்கக் கலந்துரையாடல்களிலும் விவாதங்களிலும் மாணாக்கர்கள் கலந்து கொள்ளவேண்டும்.

வகுப்பறையில் கலந்துரையாடிச் சிறந்த முறையில் கற்ற கல்வியையும், அக்கல்வியின் வழி பெற்ற கருத்துக்களையும் சிந்தனைப் பட்டறையிலும், செயற்களத்திலும் சோதனை செய்து பெறுவதே அறிவு. இந்த அறிவே வாழ்க்கைக்குத் துணை செய்ய இயலும்! அறிவு பெறுதலுக்குரிய கல்வி, சிந்தனையைத் துரண்டுவதாக அமையவேண்டும். சிந்தனையும், சிந்தனையின் தெளிவுமே அறிவுக்கு வாயில்கள் என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் வேண்டும். “சிந்தனையுள் தெளிவுமாகி” என்ற அப்பரடிகள் அருள்வாக்கினை எண்ணத்தில் கொள்வது நல்லது.

அறிவு தேவை

வாழ்க்கை வெற்றிபெற அறிவு தேவை. அறிவை எப்படிப் பெறலாம்? கல்வியின் மூலம் அறிவு பெறலாம் - பெறமுடியும் என்பது பொது விதி! ஆனால் கற்றவர்கள் எல்லாரும் அறிவுடையவர்களாக இருக்கிறார்களா, என்ன? “கற்ற நிர் மூடர்” என்ற வழக்கினை ஓர்க “பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” என்ற திருக்குறளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்வி, அறிவு பெறுதலுக்கு வாயிலாக அமைய முடியும்! ஆனாலும் சிந்தனை, செயல் இரண்டும் இருந்தால் தான் கல்வி பயனுடையதாக, அறிவு வழங்கும் இயல்பினதாக