பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

75


திட்டமே வெற்றிகரமாக நடைபெறவில்லை சாரளங்கள் நிறைந்த வீட்டில் தாராளமாக ஒளியும் வளியும் புழங்கி - நலவாழ்வளிப்பது போலவே, பல மொழிக் கல்வியும் நலம் தரும். அது அறிவை விரிவு செய்யும்; அகண்டமாக்கும். ஆனால், நமது அணுகுமுறை சரியாக இருந்தால்தான் எல்லாம் நடக்க இயலும்! தாய் மொழிப் பற்றினையும் பிறமொழிப் பற்றினையும நீக்கினாலே தூய்மையான உண்மை புலப்படும். அறிவிலே தெளிவு காண இயலும்.

தாய்மொழி, வழிபாட்டுப் பொருளன்று. தாய்மொழிப் பற்று செயலில் காணப்பெறுதல் வேண்டும். எந்த மொழி உயர்ந்தது என்ற விவாதம் அவசியம் இல்லாதது, தாய் மொழியை, தமிழைச் சிந்தை மறந்து வாழ்த்துவதால் மொழி என்ன பயனை அடையும்? அல்லது தமிழர்தான் என்ன பயனை அடைவர், பாவேந்தன் கூறியது போல்,

“செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித் தேனே!
நைந்தா யெனில் நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!”

என்று தமிழை உயிராகக் கருதித் தமிழை வளர்க்கும் பணியில் அயராது உழைத்திட வேண்டும். துறைதோறும் தமிழ் வளர்தல் வேண்டும்; வளர்க்கப் பெறுதல் வேண்டும். கல்வித் துறைக்கு மொழி ஒரு கருவி என்ற தெளிவு வேண்டும்.

அன்புகூர்ந்து மொழிச் சிந்தனைப் பெரிது படுத்தாதீர்கள்! பயிற்று மொழிச் சிக்கலில் எந்தமொழி உயர்ந்தது என்பதல்ல கேள்வி! எம்மொழி தேவை என்பது தான். காலம் தேவையை உணர்த்தும்; தேவைகள் நிறைவு செய்யப்பெறும்! உணர்ச்சியைத் தொடும் மொழி, மதம் ஆகிய துறைகளில் நிதானம் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் அவனுடைய தாய்மொழியால் சிறந்த அறிஞராக விளங்கவேண்டும். தாய்மொழிக்