பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

77


முடியும். “தாய்மொழியிலேயே - பிரதேச மொழியிலேயே கல்வியைப் பரப்ப வேண்டும்” என்று அமரர் நேருஜி கூறினார். 1941-ல் பூரீ நகரில் இந்தியக் கல்வி மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாடு “கல்லூரிகளில் அனைத்துப் பாடங்களும் தாய்மொழி வாயிலாகவே கற்பிக்கப் பெறுதல் வேண்டும்” என்று தீர்மானித்தது. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. வடபுலத்தில் இந்தியைத் தாய்மொழியாகப் பெற்றிருப்பவர்கள் தாய்மொழி வழிக் கல்வித் திட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். ஆக்ரா, அலிகார் முஸ்லீம், அலகாபாத், காசி இந்து, பீகார், லக்னோ, நாகபுரி, உஸ்மானியா, இராசபுதனா, சாகர், என்.என்.டி.டி. ஆகிய பல்கலைக் கழகங்கள் எல்லாம் இந்தி மொழி வழியாகவும், தாய் மொழிகள் வழியாகவும் இ.ஆ.ப., உயர் பட்டப் படிப்பு, பட்டப் படிப்பு முதலியவற்றைத் தொடங்கி 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கற்பித்து வருகின்றன என்பது அறியத் தக்கது. இத்துறையில் தமிழ்நாடு தான் பின்னடைவில் இருக்கிறது. நாம் இந்தியை ஏற்க மறுத்தபோதெல்லாம் தமிழைப் போல் இந்தி ஒரு வளர்ந்த மொழியல்ல, வளமான மொழியல்ல என்ற காரணங்களையே கூறிவந்தோம். இன்றைய நடப்பு நிலையைப் பார்த்தால் இந்தி, தமிழைவிட வளர்ந்த மொழியாக 21ஆம் நூற்றாண்டில் விளங்கும் போலத் தெரிகிறது. தமிழின் வளர்ச்சியற்ற வருந்தத்தக்க வரலாற்று நிகழ்வு தமிழர்க்கும் தமிழுக்கும் வராமல் தடுக்க உடனடியாகத் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழைப் பயிற்சி மொழியாக்கிடுதல் வேண்டும். இனியும் இந்த முயற்சியில் ஒரு நொடி காலத்தாழ்வு ஏற்பட்டாலும் தமிழரின் வளர்ச்சி பாதிக்கும்; தமிழ் சமஸ்கிருத மொழியடைந்த நிலையை அடையும்.

“இந்திய தேசிய ஒருமைப்பாடு ஏற்பட, தாய் மொழி வழிக் கல்வி அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப் பெறவேண்டும்” என்று இந்திய தேசிய ஒருமைப்