பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கையர்க்கரசியார்

89



"ஏழிசையாய் இசைப்பயனாய்"

என்றார் இறைவனை!

தமிழர்தம் சமயவாழ்வில் ஆசைகளை நீக்குதல் உண்டு. ஆனால் துறத்தல் நியதியாக இல்லை. வளர்ச்சியில் துறவும் கூடும். தமிழர்தம் சமயங்கள் வாழ்க்கையை மதித்துப் போற்றின.

"வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்"

என்பது தேவாரம். தமிழர் சமயங்கள் பெண்களைப் பெருமைப்படுத்தின; மனையற வாழ்வுக்கு ஏற்றம் கொடுத்தன. இருபெரும் சமய நெறிகளின் கடவுளர்களும் மனையறம் வழாது நடத்தியவர்கள், நடந்துகின்றவர்கள் என்பதே தமிழர் சமயக் கொள்கை. இங்ங்ணம் செழித்து வளர்ந்த செந்தமிழையும் சிவநெறியையும் போற்றி வளர்த்த அரசுகளில் சோழ அரசும், பாண்டிய அரசும் என்றென்றும் நினைவிற்கொள்ள வேண்டிய அரசுகளாகும்.

சோழ அரசு, பேரரசாகப் புகழ்பெற்று விளங்கிய காலம் உண்டு. இராசராசன், இராசேந்திரன் ஆகிய அரசர்கள் பேரரசர்களாக விளங்கினர். இராசராசன் எடுத்த தஞ்சைப் பெரியகோயில் உலகப்புகழ் பெற்றது. அவன் மகன் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரம் பெரிய கோயிலை எடுப்பித்தான்். அயல் வழக்கினர் மறைத்து அழிக்க நினைத்த தமிழ் மறைப் பாடல்களை திருமுறைகளை மீட்டுத் தந்தான்் இராசராச சோழன்.

இத்தகைய சோழப் பேரரசில் கீழப்பழையாறையைத் தலைநகராக்க் கொண்டு வாழ்ந்தவன் மணிமுடிச் சோழன். ஒருசில வரலாற்று ஆசிரியர்கள் கீழப்பழையாறை சோழ அரசர்கள் முடிசூட்டிக்கொள்ளும் இடமாக இருந்தது என்று கூறுகின்றனர். மணிமுடிச் சோழன் ஆண்ட காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு. இந்தக் காலத்தில் சோழப் பேரரசு