பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டழைக்கிறார். திருஞான சம்பந்தரைச் சிந்தை குளிர, செவிகுளிரப் பாராட்டி வரவேற்கின்றார்.

"சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும்
இனி.எதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்
எற்றைக்கும் திருவருள் உடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உயர்ந்து
வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்
மேன்மையும் படைத்தனம்" என்பர்.

(திருத்தொண்டர்புராணம். திருஞான. சம்பந்த சுவாமிகள் புராணம்-559)

திருஞான சம்பந்தர் எழுந்தருளிய காட்சியைக் கண்ட மங்கையர்க்கரசியார் தலையன்பால் தாக்குண்டு அமுதப் பால் பொழிகின்றார். அதே போழ்து சமணர்களுடைய வன்மங்களின் முன்னே இந்தப் பால்மணம் மாறாத ஞானக்குழந்தை என் செய்யும் என்று தாயிற் சிறந்த தயையுடன் கவலுகின்றார். இதனை உணர்ந்த திருஞான சம்பந்தர், அரசியாரைத் தேற்றி,

மானினேர் விழி மாதராய் வழுதிக்கு மாபெருந் தேவிகேள்
பானல் வாயொரு பாலனிங்கிவ னென்று நீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலென் திருவாலவாயர

என்று பதிகம் எடுத்தோதித் தேற்றுகின்றார்.