பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் – ஒரு நாகரிகம்

99



“பையவே சென்று பாண்டியற்காகவே”

திருஞானசம்பந்தர், மதுரையில் அமைக்கப் பெற்றிருந்த திருமடத்தில் தங்குகின்றார். திருஞான சம்பந்தரின் வருகை சமண முனிவர்களிடத்தில் கலக்கத்தை உண்டாக்கிவிட்டது. அச்சமும் பயமும் கொண்டவர்கள், அறிவை இழந்து விடுவர்; குறிக்கோளை இழந்து விடுவர்; நோன்பை இழந்துவிடுவர்; தவத்தை இழந்துவிடுவர்; நெறியல்லா நெறியில் தலைப்படுவர் என்பதற்கேற்பத் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த திரு மடத்திற்குத் தீ வைத்தனர். இதனைத் திருவுள்ளம் கொண்ட திருஞான சம்பந்தர் அருள் நெஞ்சத்தோடு,

"செய்ய னேதிரு வாலவாய் மேவிய
ஐய னேஅஞ்சல் என்றருள் செய்எனைப்
பொய்ய ராம்.அம ணர்கொழு வும்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே"

(மூன்றாம் திருமுறை 51-1)


என்றார். திருஞான சம்பந்தரிடம் சமய வேறுபாடுகள் வழிப்பட்ட காழ்ப்பில்லை; பகைமையில்லை. அருள் குடிகொண்ட நெஞ்சினரான அவர், பாண்டிய நாடு நன் நெறியில் நிற்றல் வேண்டும்; பாண்டிய நாட்டு அரசன் மாறவர்மன் அரிகேசரியால் மங்கையர்க்கரசியார் மங்கல நாண் சிறக்க வாழ்தல் வேண்டும் என்பனவற்றையெல்லாம் திருவுள்ளத்திற் கொண்டு, "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே” என்றார். தீமை செய்தல் தவறு என்ற படிப்பினையைக் காட்டுவதே இங்கு திருஞான சம்பந்தரின் நோக்கம். அதுவும் தீ வைத்தலாகிய தீவினை செய்தாரைத் தி சென்றடைய ஆணையிடாமல் பாண்டியற்கு ஆகுக" என்றார். அரசின் குறையினால் தான்ே தீவினையாளர் தீவினை செய்ய இயல்கிறது. ஆதலால், ஒறுக்கத்தக்கவர் தீவினையாளர் அல்லர். தீவினைக்குத் துணை போன அரசே