பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ற பழந்தமிழ்க் கொள்கை வழி திருஞான சம்பந்தர் "பாண்டியற்கு ஆகுக" என்றார். கடிதோச்சிமெல்ல எறிக. என்ற நெறிப்படி "பையவே சென்று பாண்டியற்கு ஆகுக" என்றார்.

மந்திரமாவது நீறு

திருஞானசம்பந்தரின் ஆணைவழி தீ, மாறவர்மன் அரிகேசரியை வெப்பு நோயாகப் பற்றிக் கொண்டது; உடல் வருந்தியது; எலும்பு உருகியது; முதுகு கூன் விழுந்தது. அரசன் தாங்கொணாத் துயரத்தில் ஆழ்ந்தான்். மங்கையர்க் கரசியாரும் குலச்சிறை நாயனாரும் திருஞான சம்பந்தரை அழைத்து மருத்துவம் செய்விக்கலாம் என்று அரசனிடம் விண்ணப்பிக்கின்றனர். அரசனும் உடன்படுகின்றான். ஆனால் அருகிலிருந்த சமண முனிவர்கள் தங்களுடைய மந்திரத்தாலேயே நோயை மாற்றிவிட முடியும் என்று அரசனிடம் விண்ணப்பிக்கின்றனர். அரசன் அறச்சங்கடத் துக்காளாகி நடுநிலை உணர்வுடன் திருஞானசம்பந்தர் வலப்பாகத்திற்கும் சமண முனிவர்கள் இடப்பாகத்திற்கும் மருத்துவம் செய்யும் படி கேட்டுக்கொண்டான். திருஞான சம்பந்தர் "மந்திரமாவது நீறு" என்ற திருநீற்றுப் பதிகத்தை ஒதி மன்னவனின் வலப்பாகத்தில் திருவருள் சிந்தனையோடு திருநீற்றைச் சாத்துகின்றார், வெப்பம் தனிகிறது. சமணர்கள் சமணமந்திரங்களை ஒதி இடப் பாகத்தில் மயிற்பீலியால் தடவுகின்றனர். வெப்பு நோய் தணிந்தபாடில்லை. அரசன் திருஞானசம்பந்தரிடமே இடப்பாகத்திற்கும் திருநீறு சாத்திக் கொண்டு நோய் நீக்கம் பெறுகின்றான்.

அனல் வாதம்-புனல் வாதம்

சமணர்களுக்கு உண்மையறியும் உணர்வு தலைப்படவில்லை. சினமே மேலிட்டது. மூர்க்கத்தனத்தோடு வாதினை விரும்பினர். அவரவர் மந்திரம் எழுதிய ஏடுகளை நெருப்பி