பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் – ஒரு நாகரிகம்

103


திருவடிகளைத் துணைகொண்டு தொண்டு செய்த குலச் சிறையார் என்று பாராட்டுகின்றார் சேக்கிழார்.

"புன்ன யத்தரு கந்தர்பொய் நீக்கவும்
தென்னர் நாடு தீருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன்னடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.

(திருத்தொண்டர் புராணம்-குலச்சிறை-10


என்பது காண்க

குலச்சிறை நாயனார் சிவநெறியே சார்பாகக் கொண்டொழுகியவர். சிவநெறிச் சார்பு கருதி நன்மை தீமை கூடக் கருதாது சிவனடியாரை ஏற்றுப் பாராட்டும் இயல்பான ஒழுக்கம் உடையவர் குலச்சிறை நாயனார் என்பதனை,


"உலகர் கொள்ளும் நலத்தின ராயினும்
அலகில் தீமைய ராயினும் அம்புவி
இலகு செஞ்சடை யார்க்கடி யாரெனில்
தலமு றப்பணிந் தேத்தும் தகைமையார்”

(திருத்தொண்டர் புராணம். குலச்சிறை நாயனார்-5 என்று சேக்கிழார் பாராட்டுகின்றார்.

தமிழ்ப் பண்பாட்டில் மிகச் சிறந்தது விருந்து ஒம்புதலாகும். அடியார்களுக்குத் திருவமுது அளித்தலாகும். இந்த இனிய பண்பில் குலச்சிறை நாயனார் மிகச்சிறந்து விளங்கியுள்ளார். பண்புடையோர் பலர்கடி வந்தாலும் நட்புணர்வு மீக்கூரத் திருவமுதளித்தார். உண்பதற்கென்றே யாரொருவர் வந்தாரானாலும் அவருக்கும் விருப்பம் மீதுர உணவூட்டும் நலத்திற் சிறந்தவர் குலச்சிறையார். இதனை சேக்கிழார்,