பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"பண்பு மிக்கார் பலராய் அணையினும்
உண்ய வேண்டி ஒருவர் அணையினும்
எண்பெ ருக்கிய அன்பால் எதிர்கொண்டு
நண்பு கூர்ந்தமு துரட்டும் நலத்தினார்."

(திருத்தொண்டர் புராணம் குலச்சிறை நாயனார்-6) என்று போற்றிப் புகழ்கின்றார். -

பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் விரும்பிய நற்சைவக் காப்புத் தொண்டுக்கு மெய்த்தொண்டாராயிருந்து, காப்புச் செய்த பெருமையைச் சிந்தை களிகூரச் சேக்கிழார் வாழ்த்துகின்றார்.

"ஆய செய்கைய ராயவர் ஆறணி
நாய னார்திருப் பாதம் நவின்றுள்ளார்;
பாய சீர்புனை பாண்டிமா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த் தொண்டராயினார்.”

(திருத்தொண்டர் புராணம், குலச்சிறை நாயனார் புராணம்-9)

திருவிளையாடற் புராணம் குலச்சிறை நாயனாரை "மந்திரர் ஏறு" என்றும், "கோதறு குலத்தின் மிக்க குலச்சிறை" என்றும் பாராட்டுகின்றது. திருவிளையாடற் புராணம் குலச்சிறை நாயனாரும் மங்கையர்க்கரசியாரும் செய்த தொண்டினை,

"வாலிதாகிய சைவவான் பயிரினை வளர்ப்பான்
வேலியாகி யோர் இருவரும்"

என்று போற்றிப் பரவுகிறது.

வாலிதாகிய சைவம்

திருவிளையாடற் புராண ஆசிரியர் சைவநெறியினை "வாலிதாகிய சைவம்" என்று சிறப்பித்துப் பேசுகிறார். ஏன்? சைவநெறிதான்் நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும்