பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழ் நெறிக்கு மாறான புறச் சமய நெறிகள் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன. இதனை,

"திசையனைத்தின் பெருமை எலாந் தென்றிசையே வென்றேற, மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல, "அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல, இசை முழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலை பெருக';

"அவம்பெருக்கும் புல்லறிவின் அமண் முதலாம் பரசமயப்
பவம் பெருக்கும் புரைநெறிக்ள் பாழ்படநல் லுரழிதொறும்
தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்க ளெலாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திருஅவதாரஞ் செய்தார்"

என்னும் பாடல்களின் மூலம் அறியலாம்.

திருஞான சம்பந்தரின் பெற்றோர்கள் குலவழி அந்தணராயினும், சைவநெறியையே சார்ந்தொழுகியவர்கள். அந்தக் காலத்தில் சைவத்தில் வேதாந்தம் இருந்ததே தவிர வேதத்தின் அடிப்படையில் தோன்றிய ஏகான்மவாதம், மாயாவாதம் போன்ற சமயங்கள் தோன்றவில்லை. மறைமலையடிகள் பெளத்தத்தையே மாயாவாதம் என்று குறிப்பிடுவர். இச்செய்தி ஆய்வுக்குரியது. பண்டு, தமிழகத்தில் வாழ்ந்தவர் அனைவரும் சைவ, வைணவ நெறிகளிலேயே நின்று வாழ்ந்தனர்.

வேதம்-எது?

சேக்கிழார், திருஞானசம்பந்தர் திருவவதாரத்தை எடுத்துக் கூறும்போது, "வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க' என்று அருளியுள்ளார். வேதம்' மொழிகளைக் கடந்த ஒரு பொதுச்சொல். உலகத்தின் அனைத்துச் சமயங்களுக்கும் வேதம் உண்டு. வேதம், மொழி எல்லைகளைக் கடந்தது. மானிடர் அறியப்பெறுவனவாகவும் கருத்தாகவும் உயர் கொள்கையாகவும் உடைய அனைத்தையுமே வேதம் என்று போற்றுதல் மரபு என்பார் ஞானத்தமிழாகரர் வை. இரத்தினசபாபதி. தமிழில்