பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

111


வேதத்திற்கு 'மறை என்று பெயர். திருமுறைகளில் வேதம் என்ற சொல்லும் பயில்கிறது மறை என்ற சொல்லும் பயில்கிறது. "நால் வேதம் ஆனான்', மறையுடையான் என்ற வழக்குகளைக் காண்க. மறை, நூல்கள் என்று ஒத்துக் கொண்டாலும் ரிக், யசுர், சாம, அதர்வணம் என்று வேத வியாசரால் முறைப்படுத்தப் பெற்ற வேதங்களை, திருமுறைகள் நமக்கு அரண் செய்யும் நூலாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மறுப்பும் இல்லை. திருமுறைகளில் வரும் மறை, நிறைமொழி, மாந்தர் ஆணையிற்கிளந்த மறைகளே. அவை, பொதுவாக மொழி எல்லைகளைக் கடந்தன. உணர்த்தும் பொருளால் சிறப்பாகத் தமிழுக்கே யுரியன; இதனைத் திருஞான சம்பந்தர் பாடிய,


“பண்பொலி நான்மறை பாடியாடிப்பல வூர்கள் போய்
உண்பலி கொண்டுழல் வானும் வானினனொளி மல்கிய
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கடவூரதனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லவே"


"தேம்பல் நுண்ணிடையாள் செழுஞ் சேலன
கண்ணியோடண்ணல் சேர்விடம் தேன்அமர்
பூம்பொால் திகழ் பொற் பதிபூந்தாராய் போற்றுதும்
என்றோம்பு தன்மையன முத்தமிழ் நான்மறை

ஞான சம்பந்தன் ஒண்டமிழ் மாலை கொண்டாம்படி இவை ஏத்தவல்லார்க்கு அடையா வினையே’ என்ற திருப்பாடல்களில் வரும் "பண்பொலி நான்மறை", "முத்தமிழ் நான்மறை” என்பவற்றால் அறியலாம். பொதுவான கொள்கை வேதநெறி யென்றும். அதே நெறி ஒன்றிய உள்ளத்தோடு உணர்வு நிலையிலிருந்து செயற்படுத்தும் பொழுது-அனுபவ நிலையில் வாழும் பொழுது சைவத்துறை யென்றும் பெயர் பெறுகின்றது. குளம்-படித்துறை ஆறுஇறங்கு துறை ஆகிய வழக்குகளோடு ஒப்பு நோக்குக. வேதநெறி, சைவநெறிக்கு அயல் வழக்கன்று. ஆனால் வேத