பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பயன் கொடுப்பான்-இறைவன்

உயிர்கள் வினைகளைச் செய்கின்றன. அவை நல்வினை, தீவினை என்பன. நல்வினை இன்பம் பயக்குமானாலும் அவ்வின்பத்தைத் துய்த்தற்குப் பிறத்தல் வேண்டுமாதலால் பிறவித் துன்பம் நீங்க நல்வினையும் செய்யற்க! நல்வினையும் செய்யற்க என்றால் உலக இயக்கம் எப்படி நிகழும்? நன்று செய்தலே வாழ்க்கையின் குறிக்கோள்! நல்வினை கூடாதென்றால் அறவே கூடா தென்பது பொருளன்று, நல்வினையைத் தன்னல நயப்புடன் இலாபம் கருதியோ, புகழ் கருதியோ, செய்யக் கூடாது. நன்மையை நன்மைக்காகவே செய்தல் வேண்டும். நன்மை செய்தலைத் தவிர வேறு உள் நோக்கம் இருத்தல் கூடாது. அத்தகைய நல்வினை செய்யத் தக்கது. இறைவன் உயிர்கள் செய்த வினைவழி அவ்வப் பயன்களை நுகர்விக்கும் நியதியாக விளங்குகிறானேயன்றி, அவன் தன்விருப்பப் படியாதொன்றும் செய்வதில்லை. இதுவே சைவத்தின் சிறப்பு.

ஊழையும் உப்பக்கம் காணலாம்!

சமணம், பெளத்தம் முதலியன ஊழ்வினையை ஒத்துக் கொள்கின்றன. அது மட்டுமல்ல; ஊழ்வினையின் ஆற்றலை மிகுத்துப் பேசுகின்றன. சைவ நெறியிலும் ஊழ்வினை நம்பிக்கை உண்டு. ஆயினும் அயல் நெறிகள் ஊழின் ஆற்றலை வெற்றி காண முடியாதென்று கூறும், சைவம் வெற்றி காண முடியும் என்று கூறும்.

திருஞானசம்பந்தர் கொடி மாடச் செங்குன்றம் என்ற திருச்செங்கோட்டில் அருளிய திருப்பதிகத்தில் வினையின் வழியிலானது துன்பம் என்று கூறிக்கொண்டு வினை மாற்றத்திற்குரிய முயற்சி மேற்கொள்ளாது வாளா இருப்போரை இடித்துக் கூறுகின்றார். வினையிலிருந்து மீள்வதற்கு