பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

117


முயற்சி மேற்கொள்ளாத வாழ்க்கை ஊனமுடைய வாழ்க்கை என்று ஏசுகிறார்.

"அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும்
அஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக்கே ஊனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமை தீண்டப் பெறா திருநீல கண்டம்”

(திருமுறை 1-16-1)

என்பது திருஞான சம்பந்தர் திருப்பாடல். ஆதலால் வினை வழியில் வரும் துன்பத்தை ஆண்டவன் அருளின் துணையாலும் அயர்விலா ஆள்வினையாலும் மாற்றமுடியும் என்பது சைவ நெறிக்கொள்கை. இறைவனின் ஆற்றல் இடர்களையும் ஆற்றல், மற்றவர்களின் இடர் களைவதற்காகவே நஞ்சினை உண்டு கண்டத்தில் அடக்கினான். அதனால் திருநீலகண்டன் என்று பெயர் பெற்றான். மற்றவர்கள் துன்பம் களைவதற்காக நஞ்சினையே ஏற்றான். செய்கின்ற தலைவனைத் தலைவனாகப் பெற்ற மானுடம் வினையுடன் போராடி வெற்றி பெறுவதற்கு என்ன ஐயம்? அவர்களால் "கூற்றம் குதித்தலும் கைகூடும்". சேக்கிழார், வழி வழி வளர்ந்து வந்துள்ள இலக்கியங்களில் தோய்ந்த நெஞ்சினர். திருநீல கண்டத்தை "நீலமணிமிடறு” என்று புறநானூறு பேசும்.


"விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்”

(சிலம்பு-வேட்டுவரி 24-25)

என்று சிலப்பதிகாரம் கூறுதலும் அறிக. வல்வினையினால் வரும் இடர் தாக்காமல் பாதுகாக்கப்பதற்குரிய பெயர் திருநீல கண்டம் என்று தெரிகிறது. இதனைச் சேக்கிழார்