பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

119


உரியவாறு பயன் கொள்வது மாந்தர் கடமை. பிறப்பின் பயன் கொள்வதற்கு ஏற்றநெறி செழுந்தமிழ் நெறியேயாம்.

இயற்கையோடிசைந்த நெறி

நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கை அழகுடையது; தன்மையுடையது; ஆக்கத்தருவது. இயற்கையில் தோய்ந்த நெஞ்சங்கள் அன்பில் திளைக்கும், வளர்ச்சியில் ஊக்கம் காட்டும்; தன்மையும் தண்ணளியும் சார்ந்ததாக விளங்கும். மானிடத்திற்குத் தீமை பயக்கும் எந்தச் சிந்தனையும் இயற்கையில் தோய்ந்து துய்த்தவர் செய்யார்! செய்ய நினையார்! திருமுறைகள் இயற்கையெழிலுக்குச் சொல்லோவியம் தீட்டுவன! அயல்வழக்கு புறக்கணிக்கத் தூண்டிய செழுந்தமிழ் வழக்கிற்கும் புத்துயிர் அளிக்க வந்த திருஞான சம்பந்தர் தமது பதிகம்தோறும் இயற்கையெழிலைப் பாடுகின்றார்! இயற்கையெழிலைத் திருக்கோலமாகக் காண்கிறார்! இயற்கையின் நிகழ்வுகளை இறைவனின் திருவிளையாடல்களாக வியந்து பாராட்டுகின்றார். ஆங்கிலக் கவிஞர்கள் வோர்ட்ஸ் வொர்த்தும், கீட்சும், டென்னிசனும் இயற்கையை வியந்து பாராட்டிய கவிஞர்களில் சிறந்தவர்கள். திருஞான சம்பந்தர் இயற்கையை வியந்து பாடிய கவிதைகள் அந்தக் கவிஞர்களின் கவிதைகளிலும் சிறந்தவை என்பதைக் கற்பார் உணர்வர்.


திருஞானசம்பந்தர் தீட்டிய இயற்கை ஓவியம்

பாண்டிய நாட்டில் உள்ளது திருக்கொடுங்குன்றம் என்னும் திருத்தலம். இத்திருத்தலத்திற்குச் சங்க காலத்துப் பெயர் பறம்புமலை! திருமுறைக் காலத்துப் பெயர் திருக்கொடுங்குன்றம், இன்று வழங்கும் பெயர் பிரான் மலை! மலையும் மலையைச் சார்ந்த இடமுமாதலால் குறிஞ்சி! மலை உயர்ந்தது! மலையின் முகட்டில் பிறைநிலா! சூல் முற்றிப் புயல்சுமந்த கருமேகம் உலாவருகிறது. பிறைநிலா