பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

129


"சாருந் தவத்துச் சங்கிலி! கேள்: சால என்பால்
அன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய்
நல்லூரில்
யாரும் அறிய யான்ஆள உரியான்; உன்னை எனை
இரந்தான்
வார்கொள் முலையாய்! நீ அவனை மணத்தால்
அணைவாய் மகிழ்ந்தென்றார்”

(ஏயர்கோல கலிக்காமர் புராணம்-239)


என்ற பாடல் தவத்திற்கும், இறையன்பிற்கும், மனையறத்திற்கும் முரணில்லை என்ற தத்துவத்தை விளக்குவதை அறிக. அதே போலச் சுந்தரர் தம் வாழ்வின் இயல்பினைத் தன்னிலை விளக்கமாக எடுத்துக் கூறும்பொழுது,

"சங்கிலியார் மென்தடந் தோள் தோயும்போது
நின்திருவருள் மறக்ககில்லேன்"


என்றருளிச் செய்திருப்பது அறிக பெண்மையை இழிவுபடுத்தியும் திருவருளின்பத்திற்கு வாயிலாக அமைந்த மனையறத்தை- இயற்கையோடிசைந்த வாழ்வை இழிவெனக் கருதியும் அயல் வழக்கினர் பரப்பியதை மறுத்துச் செழுந்தமிழ் வழக்கை அரண் செய்ய அம்மையப்பர் வழிபாட்டு நெறி எடுத்தோதப் பெற்றது. மனையறம் போற்றப் பெற்றது.

கலை-கடவுளையடையும் சாதனம்

தமிழ் முத்தமிழாகத் தோன்றியது; வளர்ந்தது. இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ். கூத்து, இசை, இயல் என்பது வளர்ச்சி முறை மரபென்றும் கூறுவர். தமிழ் கலைகளோடு வளர்ந்த மொழி. இசைக்கலை, ஆடற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை இங்ஙனம் பல்வேறு கலைகளிலும் தமிழர்கள் சிறந்து விளங்கினர். கலையை வாழ்க்கையை மகிழ்ச்சி