பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வசூலாக வில்லை, என்றெல்லாம் கவலைப்படவேண்டிய அவசியம் இருக்காது. ஏன்? களவுகளைக் கூட தவிர்த்து விடலாம். மீண்டும் பெண்மை பெருமை பெற வேண்டும். காதல் திருமணங்கள் நிகழவேண்டும். ஒரு வீட்டில் இன்பம் ஒரு விட்டில் துன்பம் என்ற நிலை தொடரக்கூடாது. எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும். மண்ணில் விண்ணகம் காண வேண்டும். இதுவே சேக்கிழார் காட்டிய செழுந்தமிழ் வழக்கு.


தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு - வேண்டுகோள்


சேக்கிழாரின் செந்நெறி வெற்றி பெறுதல் இன்றைய தமிழகத்திற்கு நல்லது. தமிழ்நாடு அரசு இந்த நிலையை நன்கு அறிந்து, அறநிலையத்துறை மூலம் சேக்கிழார் விழா நெறியைப் பேணிக்காப்பதை நோக்கமாகக் கொண்ட அரசு இராசராசனுடைய ஆயிரமாவது முடிசூட்டு விழாவை இராசராசேச்சரத்தில் சிறப்பாக எடுத்த அரசு செழுந்தமிழ் வழக்கிற்கு அரணாகவுடைய திருமுறைகளை அயல் வழக்கினரிடமிருந்து மீட்டுத் தந்த இராசராசன் விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும் அரசு; கோச்செங்கட் சோழன் நினைவாகத் திருக்கோயில் திருப்பணிக்குப் பொது நிதி அமைத்த அரசு நாடெல்லாம் முன்னவன் பூசை முட்டின்றி நடக்க வைப்பு நிதி அமைத்துள்ள அரசு. நம்முடைய பாராட்டுதலுக்குரிய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.எம்.வீ. அவர்கள் சிறந்த சைவச்சிந்தனையார், திருமுறைப்பற்றாளர். அவர்தம் அறநிலையத்துறை அமைச்சில்தான்் இத்தகைய பணிகள் சிறப்புற நடைபெறுகின்றன. அரசுக்கும் அமைச்சருக்கும் நமது நன்றி! கடப்பாடு. அமைச்சர் அவர்களுக்கு மேலும் ஒரு வேண்டுகோள்! பொன்மனச் செம்மல் தலைமையில் அமைந்துள்ள தமிழ் நாடு அரசு சங்ககாலப் புலவர்களுக்கு நினைவுத் தூண் நட்டு, புகழ் பூத்த சங்க காலத்தை நினைவுக்குக் கொண்டு வந்துள்ளது. அதேபோல் சேக்கிழார்