பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


திருமுறைத் திருநாளில்
தலைமை உரை


சித்தாந்தச் சிவநெறிச் செல்வர்களே!

செந்தமிழ்ச்-சொக்காின், பேரருட் பெருக்கிலே-குரு ஞானசம்பந்தப் பெருந்தகையின் ஞானவாரமுதப் பெருக்கிலே திளைக்கின்ற நாம் இன்று திருமுறைத் தமிழிலே இன்பம் காணக் கூடி இருக்கின்றோம். இந்த இன்ப வாய்ப்பினை அளிக்கத் திருஉள்ளங் கொண்ட திருப்பெருந்திரு மகாசந்நிதானம் அவர்களின் திருவருளை வந்தித்து வாழ்த்திப் பணிமேற் செல்ல விழைகின்றோம்.

சமய வாழ்க்கை

மக்கட் பிறப்பின், உண்மைப் பயனை எய்த வழி செய்வது சமயமேயாம். ஏன்? சமயச் சார்புடைய வாழ்க்கையே வாழ்க்கையாக மதிக்கப் பெறுகின்றது. மக்களை மிருக வாழ்க்கையிலிருந்து, பூரண மனித வாழ்க்கைக்கு மாற்றி, அருள்தோய்ந்த தெய்வ வாழ்க்கைக்கு உட்படுத்துவது சமயமேயாம். துன்பம் நிறைந்த வாழ்க்கையி


* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.