பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


லிருந்து மக்களை இன்ப வாழ்க்கைக்கு இழுத்துச் செல்வதும் சமயமேயாம். சமுதாய உணர்வுடையோர்களாக மக்களை ஆக்குவதும் சமயமேயாம். சமய வாழ்க்கையின் இன்றியமை யாமையை இந்த நாட்டுப் புலவர் பெருமக்களும், ஏனைய நாட்டு அறிவியற் கலைஞர்களும், மிக நன்றாக வற்புறத்தி உள்ளனர். உலகப் பொது மறை தந்த வள்ளுவர், தமது அருமை நூலில் சமய வாழ்க்கையின் இன்றியமையாமையைத் தெள்ளத் தெளியப் பேசியுள்ளார். சிறப்பாகச் சமயச் சார்புடைய வாழ்க்கையே தெளிந்த வாழ்க்கை நிலை என்று கூறிச் சமய வாழ்க்கையின் பெருமையைப் பாராட்டுகின்றார். பழந்தமிழ்ப் பெருநூலாகிய தொல்காப்பியம் &FLDLj வாழ்க்கையை, "அறவெற்றி” என்று பேசுகின்றது. எனவே சமய வாழ்க்கை அன்பு மலிந்த-அருள் நிறைந்த-அறம் தழுவிய வாழ்க்கை என்பது விளங்குகின்றது. சமயச் சார்பற்ற வாழ்க்கை வளமற்றது, பயனற்றது என்று அறிவுடைப் பெரியோர்கள் சொல்லுகின்றனர்.

இந்த நூற்றாண்டின் ஷேக்ஸ்பியர் என்று போற்றப் பெற்ற ஜார்ஜு பெர்னாட்ஷா, சமயச் சார்பற்ற மனிதர்களை, "Men without religion or moral cowards and mostly phycial cowards too"- என்று இழித்துப் பேசுகின்றார்,எனவே வாழ்க்கையை வகைப்படுத்த வளம்படுத்த- அருட்சார் புடையதாக்கச் சமய வாழ்க்கை தேவையான தொன்றேயாம்.

தலையாய சைவத் திருநெறி

இவ்வுலகிலே, மக்கள் என்று அறிவும் உணர்வும், உடையவர்கள் ஆனார்களோ அன்றே சமயமும் தோன்றி வளர்ந்து வளம் பெற்றது. அங்ஙனம், இவ்வுலகமெங்கும் சமயக் கொள்கைகள், அறிவு-உணர்வு நிலைகளுக்கேற்பத் தோன்றி வளர்ந்தன. அங்ஙனம், தமிழகத்திலே தோன்றி வளர்ந்த சமயம் சைவசித்தாந்தத் திருநெறி. இந்த நெறி காலத்தொடுபடாத பழமையை உடையது. மேனாட்டு வரலாற்றறிஞர்களின் அறிவுக்குக் கூட அது மிகப் பழையதொரு நெறியாக-உலகப் பொது நெறியாகக் காட்சி