பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உருக்கும் தன்மையை உடையன. அருமையில் எளிய அழகுடையவனவாக அமைந்து அருட்டிறம் விளைவிப்பன. இனிய எளிய சொன்னடையில் அமையப் பெற்றன. தண்ணென்ற ஒழுக்கில் தலைசிறந்து விளங்குவன. இம்மையும்-மறுமையும் இன்பம் பயப்பன. நல்ல புத்தங்களைப் பற்றி ஜான் மில்டன் பேசுகின்ற பொழுது, "A good book is the precious life blood of a masterspirit emblamed and treasured upon purpose to a life beyond life" என்று குறிக்கின்றார்.

இங்ஙனம் வாழ்க்கையை உயர்ந்த முறையில் வளம்படுத்த - அருள் நெறிப்படுத்த - இம்மையோடன்றி மறுமையிலும் பயன்தரத் தக்கதாக அமைந்துள்ளவை திருமுறைகள் என்பது அநுபவ உலகறிந்த உண்மை.

திருமுறைகளும் பிற்காலத்துப் புலவர்களும்

தேவாரம் முதலிய திருமுறைகளின் பெருமையையும், பயனையும், பிற்காலப் புலவர் பெருமக்கள் மிக நன்றாகப் பேசியுள்ள்னர் திருமுறைகளைக் கண்டு முறைப்படுத்தி, திருமுறை கண்ட வரலாற்றையுஞ் செய்த நம்பியாண்டார் நம்பிகள் திருமுறைகளின் உயர்பண்பை மிக நன்றாக விளக்கியுள்ளார்கள். ஞான சம்பந்தரது ஞானத் தமிழாகிய தாவாயைத் துணையாகக் கொண்டு பிறவிப் பெருங்கடலை நீந்த முடியும் என்று பேசுகின்றார்.

"பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தோற்றோணி கண்டீர்-நிறைஉலகிற்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்”

என்பது பாடல், மக்கள் தாம் உய்வதற்கு வழிகாட்டும் குருவாகத் தேவாரத் திருமுறைகளைக் கொள்ளலாம் என்றும், அங்ங்னம் கொண்டொழுகினால், சிவனது, அடிகளைச் சூடும் பேறுபெற்று, பிறவியற்று, பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவர் என்றும் நம்பிகள் கூறகின்றார்.