பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"உரைதளர்க் துடலார் நடுங்காமுனம்
நரைவிடை யுடையா னிடம் நல்லமே
பரவுமின் பணிமின் பணிவாரோடே
விரவுமின் விரவாரை விடுமினே"

என்று அழகுறக் கூறுகின்றார். சிவனடியார்களை வழி படாதவர்கள் என்னுடையரேனும் மதித்தற்குரியரல்லர் என்பது நக்கீரர் கருத்து.

"பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடையர் ஆனாலுஞ் சீசீ-இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணா தவர்"

என்பது சுக்கிரருடைய நற்றமிழ்ப் பாடல். இன்னோ ரன்ன பல அரிய கருத்துக்களைத் திருமுறைகளில் கண்டு மகிழலாம்.

திருமுறைகளின் பயன்

திருமுறைகளின் பயனை, திருமுறைகள் எழுந்த வரலாற்றைக் கொண்டே உணர முடிகின்றது. திருமுறைகள் பல சந்தர்ப்பங்களில் இன்னல்களை நீக்கி இன்பந்தர எழுந்தனவாம். அன்று அப்பாடல்கள் செய்த நன்மைகளை, இன்றும் உணர்ந்து ஒதுகின்றவர்களுக்குக் கொடுத்தே வருகின்றன. அஃதோடன்றி, திருமுறைகளின் பயனை சிறப்பாகத் தேவாரங்களின் பயனை அவற்றை அருளிய நாயன்மார்களே அறுதியிட்டு உரைத்துள்ளனர். சிவஞானச் செம்மலாராகிய ஞானசம்பந்தப் பெருந்தகையாரது அருட்பாக்களைப் பயில்வோர், நோயினின்று விடுபெறுவர். சிவகதிப் பெருவாழ்வும் பெறுவர் என்பதை,

"ஞான சம்பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே"

- எனவும்,

"கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன்சொல் மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே'