பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமுறைத் திருநாளில் தலைமை உரை

149


எனவும்,

"அந்திவண்ணன், தன்னை அழகார் ஞானசம்பந்தன்சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வரே"

எனவும், வரும் ஞானசம்பந்தரது அருண் மொழிகள் விளக்குகின்றன. ஞானசம்பந்தரது அருட்டாக்களைப் பயிலுகின்றவர்கள் இம்மை வாழ்வுக்குரிய அனைத்தும் பெற்றுத் திருவருள் இன்பமும் பெறுவர் என்பதை,

"சினமவிகரியுரி செய்தசிவனுறை தருதிருமிழலையைமிகு
தனமனச்சிரபுர நகரிறை தமிழ்விரகன துரை யொருபதும்
மனமகிழ்வொடு பயில்பவ ரெழின்மலர் மகள்கலைமகள் சயமகள்
இனமலிபுகழ் மகள் இசைதர இருநிலனிடை இனிதமர்வரே”

என்ற அருட்பாடல் வலியுறுத்துகின்றது. திருமுறைப் பாக்களை விரும்பிப் பயில்பவர்கள் மக்களின் மேலாயவர் என்பதை ஆளுடைய நம்பிகள்,

"கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை விரும்
புவார் மேலையார் மேலையார் மேலாரே”

என்றருளி விளக்கியுள்ளார்கள்.

போற்ற வேண்டிய கடமைப்பாடு

இத்தகு திருமுறைகளைப் போற்றிக் காத்துப் பயின்று இன்பப் பெருவாழ்வைப் பெறவேண்டுவது சைவத் தமிழ் மக்களது கடமைப்பாடு. அங்ங்னம் போற்றுவதால் நமது நாட்டு அருட்செல்வத்தைக் காப்பாற்றிய பெருமையை அடைவதோடன்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய தொரு பயனையும் முன்னேற்றத்தையும் அடைகின்றோம்.

உயர்ந்த வாழ்க்கையை உடையராய் இருந்த சான்றோர்களது வாழ்க்கையையும் அவர்களது அருமைத் திருவாக்கு