பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

153


உயர்மறையெனத் திகழ்கிறது. இதனை நாள்தோறும் ஒதி உணர்ந்தால் தீவினை அகலும்-அன்பு தனி சிறந்து ஊற்றெடுக்கும்-உணர்வு சிறக்கும்-ஞானம் கைகூடும்-இன்ப அன்பினை எய்தி இன்புறலாம்.

பெரியபுராணம் அன்பினில் விளைந்த காப்பியம் -ஆற்றல்மிக்க அன்பினை அளிக்கும் காப்பியம்-வரலாற்று உண்மைகளைக் கூறுவதால் வரலாற்றுக் காப்பியம்-பெருங்காப்பியமெனச் சிறந்து விளங்குவதுமாகும்.

பெரியபுராணம், தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல்களையும் அக இலக்கிய இலக்கணங்களையும் திருமுறை களையும் போற்றித் தழுவிய காலத்தில் தேவையாகிய விரிவையும் பெற்றுச் சிறப்புற்றமைந்திருக்கிறது. பழமையான வரலாறு என்ற பொருளில் "புராணம்” என்ற பெயரைப் பெரியபுராணம் பெற்றிருந்தாலும், அது மற்றைய புராணங்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கதன்று; திருத்தொண்டத்தொகை, திருத் தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றைச் சார்ந்து தோன்றிய நூலெனினும் பெரிய புராணம், முதல் நூலுக்குரிய தகுதியனைத்தும் பெற்று விளங்குகிறது; உரை விளக்கம் தரும் நூலாகவும் விளங்குகிறது. மூவர் அருளிச் செய்த திருமுறைப் பாடல்களுக்குச் சேக்கிழார் செய்துள்ள உரை விளக்கம் அருமைப் பாடுடையது.

சேக்கிழார் செய்த நூல் பத்திக் காப்பியம்-ஆனாலும் உணர்ச்சிநிலைப் பக்திக் காப்பியமல்ல-மெய்யறிவு நூல்ஞானநூல். அதனால், சமுதாயத்தை மூடிக்கிடந்த மூடப் பழக்கங்கள், வாழ்க்கைக்கு ஒவ்வாத வழக்கங்கள் ஆகியவை களை அகற்றும் புதுமை நூல். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள தமிழக வரலாற்றினை நமக்குத் தரும் வரலாற்று நூல். அதற்கு முந்திய பழங்காலச் செய்திகளும் உண்டு. வரலாறு என்றால்,