பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

155



மெய்வைத்த காலும் தரும், ஞாலம் அளந்த மேன்மைத்
தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணஞ்செ யிரம்"

என்பது சேக்கிழார் பாடல். இப் பாடலில் "ஞால மளந்த மேன்மை தெய்வத் தமிழ்" என்று தமிழின், பெருமையைச் சிந்தையினிக்கச் செயலினிக்க அருளிச் செய்துள்ளார். உயிர்களுக்குச் சால்பினை வழங்குவது தமிழ் என்றும், அதுவும் முத்தமிழ் என்றும் அத்தமிழ் தங்கிய மூதூர் மதுரையென்றும் சேக்கிழார் சிறப்பித்துப் பாடுகிறார். "சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர்” என்பது சேக்கிழார் வாக்கு. ஆலவாயில் எழுந்தருளிய அழகமர் சொக்கன், தமிழுக்கு அகத்தினைப் பொருள் நூல் தந்தனன் என்பது வரலாறு. அந்த வரலாற்றை நினைந்து சேக்கிழார் மதுரையைப் புகழ்ந்து பாடுகிறார். ஆலவாயில் உறைகின்ற அப்பன், ‘கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறை வாய்”த் திளைத்தவன், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இறைவன் இருந்து ஆராய்ந்தமையை எண்ணி எண்ணி மகிழ்கிறார் சேக்கிழார். அகத்தினை இலக்கணத்தை அகன்ற தமிழகத்திற்குத் தந்து அவ்வகனைந்தினை ஒழுக்கத்தின் வாயிலாகவே செம்மைப் பொருளும் தேர்ந்திடச் செய்த அருளை வியந்து பாராட்டுகின்றார்.

"மும்மைப் புவனங்களின் மிக்கதன் றேஅம் முதுரர்
மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச்
செம்மைப் பொருளும் தருவார் திருவால வாயில்
எம்மைப் பவந்தீர்ப் பவர்சங்க மிகுந்த தென்றால்”

என்பது சேக்கிழார் பாடல்.

தமிழ் வழக்கு

திருஞானசம்பந்தரின் வரலாற்றில் சேக்கிழார், தமது நெஞ்சத்தைக் காட்டுகிறார். "செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறை வெல்ல வேண்டும்" என்பதே சேக்கிழாரின்