பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறிக்கோள். "திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற வேண்டும்” என்பது அவர்தம் ஆர்வம், "செழுந் தமிழ் வழக்கு” என்பது சிந்துவெளி நாகரிகக் காலந்தொட்டுச் சிறந்து விளக்கமுற வளர்ந்திருக்கின்ற சித்தாந்தச் செந்நெறியே யாகும். இன்றும் சித்தாந்தச் செந்நெறிக்கு ஈடான சமயம் மனித குலம் கொண்டொழுகும் சமய நெறிகளுக்குள் தோன்றவில்லை.

உலகில் புகழ்பெற்ற சமயங்களில்கூட, பகுத்தறிவுத் திறனாய்வுக் களத்தில் நின்று வினாக்கள் கேட்க முடியும்-விவாதிக்க முடியும். சித்தாந்தச் செந்நெறியைப் பொறுத்தவரையில் வினாத் தொடுக்கும் எல்லைகளைக் கடந்து சிந்தனை முகட்டின் எல்லையில் முடிந்த முடிபாகத் திகழ்கிறது. கடவுள் நம்மைப் படைத்தான்் என்று சொல்லும் சமய நெறிகளும், நாமேதான் கடவுள்' என்றும் கூறும் சமய நெறிகளும், பகுத்தறிவின் முன்னே நிற்க இயலா.

"உயிர், கடவுள் இரண்டும் இருவேறு உள் பொருள்கள்என்று முள்ள உள்பொருள்கள். உயிர் படைக்கப்பெற்ற தல்ல; உயிர் குறையுடையது, கடவுள் நிறையுடையது. உயிரின் குறையும்-கடவுளின் நிறையும் கூட இயற்கை குறைஅறியாமை நிறை-அறிவு, ஞானம். குறை நீங்கி நிறைவு பெறும் உறவே உயிர்-கடவுள் உறவு! இந்த உறவு ஞானத்தின் பாற்பட்டது என்ற சைவ சித்தாந்தக் கொள்கையின் சீர்மையை என்னென்போம். இத்தகைய செழுந்தமிழ் வழக்கு, பிற அயல் வழக்குகளை வென்று விளங்கவேண்டும் என்பது சேக்கிழார் திருவுள்ளம். மீண்டும் மாயாவாத மயக்கத்திலிருந்து செழுந்தமிழ் வழக்கைக் காப்பாற்றுதல் நமது கடமை.

பகுத்தறிவு இயக்கத்தைவிடக் கொடுமையானது மாயாவாதம், பகுத்தறிவாவது மாறுபட்டுத் தோன்றுவதால் எளிதில் அவ்வழியில் மக்கள் செல்லார். ஆனால் மாயாவாதம் புல்லுருவியாக வேறுபாடு காட்டாமல்