பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போல எரியும், அன்பு தூய வேள்வித் தீ; ஆற்றல் மிக்கது. இந்த அன்பு தீமையைச் சுட்டெரிக்கும்; இன்பத்தை வழங்கும். அன்பு உடையோர் வளர்வர் வாழ்வர்; அவர் தம்மைச் சார்ந்தோரையும் அன்பு உயர்த்தும்; உலகையும் உயர்த்தும். ஏன்? இறைவனையே ஏவல் கொள்ளும்! ஆற்றல் மிக்க அன்பு வளர்ந்தால் உலகத்தில் துன்பம் ஏது? அன்பினைப் பெற விரும்பாதவர்கள் அன்பினைப் பெறுதற்குரிய ஆவல் அற்றவர்கள், ஆசைகளை-பாசங் களை-அன்புபோலக் காட்டி மேவிப் பழகுகிறார்கள். அவர்தம் ஆசைகள் நிறைவேறாதபொழுது பிணங்கு கிறார்கள்; பிணக்குக்குக் காரணம் கண்டு பிடிக்கிறார்கள். பகைத் தீ மூட்டுகிறார்கள்; படைக்கலங்களைப் பெருக்கு கிறார்கள். கோளினைக் கொட்டி அளக்கிறார்கள்; வீதி தோறும் வதந்தியைப் பரப்புகிறார்கள். இத்தகைய அன்பிலிகள்-அன்பு வேடதாரிகள்-இன்று தொற்று நோயெனத் தெருத்தோறும் அலைகிறார்கள். இவர்கள் வாழ்ந்தாலென்ன? மாண்டாலென்ன? அதிசூரனும்-முத்த நாதனும் வாழ்ந்ததுபோல வாழ்கிறார்கள்; வாழ்ந்துவிட்டுப் போகட்டும். அங்ங்ணம் வாழ விடுதல் நமது நெறியுங்கூட. ஆனால், நாம் என்ன ஏனாதிநாதரைப் போலவும் மெய்ப்பொருளாரைப் போலவும் விளங்கியா விட்டுக் கொடுக்கின்றோம். அல்லவே!

சேக்கிழார் காட்டும் அன்பு தூய்மையானது. வணிக நோக்கில்லாதது. இன்று சிலர் பழகுதற்கே பணம் கேட்கிறார்களே! இலாப நட்டக் கணக்குப் போடுகிறார்களே! பழங்காலத்தில் பலரோடு பழகினால் ஆக்கம் இருந்தது; அழிவு தடுத்து நிறுத்தப் பெற்றது; அமைதி இருந்தது. சேக்கிழாரின் நெறி அன்பு நெறி; காப்பியம் முழுதும் அன்பு வெள்ளம்; அன்பு வேள்வி. அன்பில் அயராது வாழ்வோர் வெற்றி பெறுவர். தலைவியிடத்தில் தலைவன் காட்டும் அன்பும் உண்டு. தலைவனிடத்தில் தலைவன் காட்டும் அன்பும்