பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டு காதல் வாழ்க்கையைச் சிற்றின்பம் என இழித்துப் பேசும் புல்லறிவாண்மையை மறுப்பார் போலச் சுந்தரர், பரவையார் காதலை யோகமெனச் சிறப்பித்துப் பாடுகிறார்.

"தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்."

இத்தகைய காதலராதல் எளிதன்று. நாள்தோறும் பழக்கத்தால் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் தழுவி வளர்ந்து அன்பை வளர்த்துத் துய்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய அன்பு நெறி, சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் தேவை. சமுதாய அமைப்பின் தோற்றமே அன்பினால் ஆயது; அன்பின் விளைவுக்குக் களமாக அமைய வேண்டியது. சேக்கிழார் காட்டும் சமுதாய அமைப்பு, தாங்குவது; வளர்ப்பது; திருந்தத் துணை செய்வது; வேலியாக அமைவது; ஆனால் இன்றோ, சமுதாய அமைப்பு போலித் தன்மையுடையதாக-உயிர்ப் பில்லாததாக இருக்கிறது. இன்று, சமுதாய அமைப்பு அச்சுறுத்துகிறது; பிடரியில் உட்கார்ந்து கொண்டு சவுக்கால் அடித்து அவமானப்படுத்துகிறது. சமுதாய அமைப்பை இந்த இழி நிலையிலிருந்து, சேக்கிழாரின் சமுதாய நெறியில் மனமாற்றம் செய்ய வேண்டும். இன்று பழகும் பழக்கம் வாழ்க்கையில் கழித்தற் குறியீடுகளையும் தருவதில்லை; கூட்டற் குறியீடுகளையும் தருவதில்லை. நாமும் மாற விரும்புவதில்லை; மற்றவர்களையும் மாற்ற விரும்புவதில்லை. எப்படியோ பல ஆண்டுகள் பயனின்றியே ஒரு சமுதாய வாழ்க்கையைப் பெயரளவில் நடத்திக் கொண்டு வருகின்றோம். நீரோட்டமில்லாத நிலத்தில் பசும் புல்லும்