பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆதலால் தன்னோடு பொருதியவனையும் கூட அவர் ஐயுறவில்லை. ஐயுறுதலே தீய பண்புதானே! இங்ஙனம் ஐயுற்றுக் காதலை, நட்பை உறவை இழந்தவர்கள் ஏராளம்.

"ஐயப்பாடு தங்குகின்ற நெஞ்சு தவறுள்ள நெஞ்சு" என்று செகப்பிரியர் கூறுவார். அது மட்டுமன்று நம்பிக்கைக்கு எதிரானது ஐயுறல். ஐயுறல் நம்பிக்கையைக் கெடுக்கும்; ஊற்றெடுக்கும் அன்பை வற்றச் செய்யும், நன்னம்பிக்கை ஒரோவழி பிழைபடலாம். அதனால் ஒன்றும் பிழை வாராது; இழப்பும் வாராது. நம்பாமையினால் வரும் இழப்பைவிட எந்நிலையிலும் நம்பிக்கையினால் ஒரோவழி வரும் இழப்பு-இழப்பே அல்ல. அதுவும் வாழ்க்கையை வளர்க்கும்; புகழைத் தரும். நம்பிக்கையில்லாதவர்கள் காலப்போக்கில்-தம்மையே நம்பாத பைத்தியக்காரர்களாகிவிடுவர். ஐயத்தை வழக்கமாகக் கொண்டவர்கள், யாரையும் நம்பமாட்டார்கள். ஏனாதிநாதர் நம்பிக்கையில் திளைத்த நல்ல சிவனடியார் ஆதலால், அதிசூரன் குறிப்பிட்ட தனியிடத்திற்குத் தனியே போருக்குச் செல்கிறார். அதிசூரனும் போருக்கு ஆயத்தமாயிருக்கிறான். போர் தொடங்கிவிட்டது. கடுமையான போர் செய்யும் பொழுது, அதிசூரன் கேடயத்தால் தன் நெற்றியை மறைத்துக் கொண்டே போரிடுகிறான். போர் நல்ல வேகத்திலிருக்கும் பொழுது திடீரென அதிசூரன் தன் நெற்றியை மறைத்திருந்த கேடயத்தை விலக்குகிறான். நல்ல போருணர்வில் போர் செய்து கொண்டிருந்த ஏனாதிநாதர் கண்ணில், அதிசூரன் கொண்ட திருநீற்று வேடம்படுகிறது; தெரிகிறது. ஒரு விநாடி போருணர்ச்சி மாறுபடுகிறது. அன்பு ஊற்றெடுக்கிறது; அருள் உணர்வு தலைப்படுகிறது; அமைதி தவழ்கிறது; தம்மையே ஒப்படைக்கும் பெருந்தகைமை பிறக்கிறது. அவர் குறிக்கோள் வழி இசைந்து நிற்பதே கடமை என்பது ஏனாதிநாதர் திருவுள்ளம். ஆயினும் போரில் சிவனடியார் என்று கருதிப் போரிடாமலிருந்து விட்டால் படைக்கலமில்லாதாரைக்