பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

175


குறிக்கோள் வாழ்க்கை

உயிர்கள், உய்திபெற வேண்டிய நிலையில் உள்ளவை: உயிர்கள் உய்திக்குரியன. உயிர்கள் முயன்றால் உய்தி பெறமுடியும். உயிர்கள் உய்திக்குரிய அடிப்படைத் தகுதிகளைப் பெற வேண்டும். உயிர்கள் உய்திபெறல்- அதாவது நிறைவு பெறல் இறைவன் விருப்பத்தால் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றன்று. உயிர்கள் தகுதி பெற்றாக வேண்டும். உயிர்களைத் தகுதிப்படுத்துவது அவை ஏற்றுக் கொள்கின்ற குறிக்கோளைப் பொறுத்தது. வாழ்க்கையில் பொருள்பட வாழ்கிறவர்களுக்கெல்லாம் நிச்சயம் குறிக்கோளிருக்கும். குளிக்கோளில்லாத வாழ்க்கை கெட்ட வாழ்க்கை. "குறிக்கோள் இலாது கெட்டென்" என்பார் அப்பரடிகள்,

“நல்லாறு" என்பதும் "நன்னெறி" என்பதும் "அறம்' என்பதும் கடலினும் பரப்புடையது. எல்லாவற்றையும் எல்லாராலும் செய்தல் இயலாது. ஆதலால் தத்தம் இயல்புக் கேற்றவாறு ஒன்றை அல்லது சில துறைகளைக் குறிக்கோளாக ஏற்றுக் கொண்டு உறுதியுடன் செய்து நிறைவேற்ற வேண்டும். பலர் ஆசைகளையும் ஆவல்களையும் கூடக் குறிக்கோள்கள் என்று தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். குறிக்கோள் என்பது தற்சார்பு இல்லாதது. பிறர் நலத்தைச் சார்பாகவுடையது. அது தூய அன்பில் விளைவது; இடர்களைப் பற்றி எண்ணாதது. உயர்குறிக்கோளுடையோர் பல்கிப் பெருகி வளர வளர நாடு வளரும்-சமுதாயம் மேம்பாடுறும். சிலர் சூழ்நிலைகளின் துண்டுதலால் ஒரு குறிக்கோளை எடுத்துக் கொண்டு விடுவர். அக்குறிக்கோளை அடைவதற்குத் தடை ஏதாவது வருமானால் துன்பம் வருமானால் குறிக்கோளைக் கைவிட்டு விடுவர்; பிழைத்துப் போய்விடுவர்.

பெரியபுராணத்தில் வருகிற அடியார்கள் அனைவரும் குறிக்கோளுடையவர்கள்; குறிக்கோளில் உறுதியாக நின்றவர்கள்; தம் உயிரினும் குறிக்கோள் உயர்ந்தாக எண்ணிய-