பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

179


செய்கிறது. வேளாளர் குலத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர், வேதியர் குலத்தைச் சேர்ந்த அப்பூதியடிகள் இருவரும் உடனிருந்து உண்டது; சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமான் நாயனார் இருவரும் உடனிருந்து உண்டது; திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், முருக நாயனார் ஆகியோர் உடனிருந்து உண்டது ஆகிய நிகழ்ச்சிகளை உன்னுக. இதனால் சாதி வேற்றுமைகள் அன்புக்கும் உறவுக்கும் தடையாக இல்லையென்பதை அறிய முடிகிறது. திருஞானசம்பந்தரின் திருப்பாடலுக்குத் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவராகக் கூறப்பெறும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழ் மீட்டினார். வேதியர் குலத்தைச் சேர்ந்த திருநீலநக்க நாயனார் வீட்டில் வேள்வி செய்யும் துய்மை நிறைந்த அறையிலேயே திருநீலகண்ட யாழ்ப்பாணர் தங்கியிருந்தார். வேதியர் குலத்தைச் சேர்ந்த அப்பூதியடிகள் வேளாளர் குலத்தைச் சேர்ந்த அப்பரடிகளைத் தம் ஞானாசிரியராக வழிபடும் கடவுளாக ஏற்றுக் கொண்டமையை நினைதொறும் நெஞ்சு நெகிழ்கிறது. இவை மூலம் நாம் உணரத்தக்கது இயற்கை வழிப்பட்ட பிரிவுகள் அன்று இருந்தன; ஆனாலும் அவை வற்புறுத்தப் பெறவில்லை, உறவுக்குத் தடையாக இல்லை. தெளிவாகச் சொன்னால் சாதி வேற்றுமைகளைப் பாராட்டாத ஒரு சமுதாய அமைப்பு அன்று கால்கொண்டிருந்தது.

அன்று திருக்கோயில் வழிபாட்டிற்கூட எல்லைகளும் சாதிகளும் இருந்ததில்லை. வேடுவர் குலத்தைச் சேர்ந்த கண்ணப்பர் காளத்தியப்பர் திருமேனிக்குத் தாம் விரும்பிய வண்ணம் விழிபாடு செய்திருக்கிறார். அதற்கு யாதொரு தடையுமில்லை. சிவகோசரியாருக்கு ஏற்பட்ட வருத்தம் "யார் வழிபட்டவர்?’ என்பதன்று. பொதுவாகச் சிவநெறியில் புலால் படைத்தலில்லை. சந்நிதியில் புலால் சிதறியிருந்தது. அதை நினைத்துத்தான் சிகோசரியார் "இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார்” என்று நொந்தார். திருக்கோயி-