பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

183


குறிப்பிடத்தக்கது. அதனால் அந்தத் திருத்தலங்களின் பெருமை குறைந்துவிடவில்லை. இன்றைய கல்வி கூடசெய்முறையில்லாத கல்வி-பயனற்றது என்று சொல்கிறார்கள். சமயத் துறையில் மட்டும் செய்முறைக்கு வாய்ப்பில்லாத காணல் அளவேயுள்ள வழிபாட்டுமுறை நிறைபயனைத்தராது. ஆதலால் எல்லாரும் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியுள்ள பெருமானைப் புனலும் பூவும் சொரிந்து வழிபடும் உரிமை வேண்டும். இங்கு நாம் ‘எல்லாரும் என்று குறிப்பிடுவதால் "விதிமுறையில்லாமல் எல்லாரும் வழிபடலாம்” என்று கொள்ளக்கூடாது. "தகுதியுடையார் எல்லாரும் வழிபடலாம்” என்பதுதான் குறிப்பு. திருமுறை நெறிகாட்டும் "திருவாளன் திருநீறு" பெறும் சமய தீக்கை பெற்றோர், சமய நிறுவனங்களால் ஏற்பளிக்கப் பெற்றோர், சமய சீலமுடையோர் என்றெல்லாம் வரையறை வைத்துக் கொள்வது இன்றியமையாதது. இச் செயல்முறை வருவதால் சிவாச்சாரியாரின் தரமும் தகுதியும் உயருமேயன்றி யாதொரு குறைவும் வராது. அவர்கள், அயல்வழிக் கருத்தைக் கேட்டு அலமருதல் நியாயமன்று. அவர்கள் அருச்சர்களாக இல்லாமல் கிவாச்சாரியார்களாக இருந்து, கண்டு காட்டி வழி நடத்த வேண்டும் என்பதே நமது விருப்பம். இது நமது சமயத்தை வளர்ப்பதற்கும் சமுதாயத்தை ஒருங்கிணைப்பதற்கும் உரிய சாதனம். இதுவே சேக்கிழார் கண்ட வழிபாட்டு முறை.

திருமுறை வழிபாடு -

இறை வழிபாடு என்பது கடவுளுக்காகச் செய்யப் பெறுவதன்று. உயிர், இறையருளைப் பெறுவதற்குக் கருவியாகக் கொள்வது வழிபாடு, வழிபாட்டின்பயன், உயிருக்கேயாம். உயிர் நலமுறுதல், வழிபாட்டின்பயன், உயிருக்கேயாம். உயிர் நலமுறுதல், வழிபாட்டின் ஆக்கம். "உயிர், எல்லாம் வல்ல இறைவனை நோக்கிப் பெருமானின் நலம் பெறுதல்வேண்டி அழுகின்ற அழுகையே பிரார்த்-