பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்னும் அருங்குறட்பாவை மனத்தகத்தே கொண்ட மாண்புடையோரால் இத்திருத்தொண்டர் புராணம் பெரிய புராணம் என்றே அன்றுமுதல் போற்றப்பட்டு வருகிறது. சைவ தோத்திரத் திருமுறைகள் 12 என்பதை உணர்த்துவதுபோல் தோன்றிய பெரிய புராணம், பன்னிரண்டாம் நூற்றாண்டில் பன்னிரண்டாம் திருமுறை யாகப் போற்றப்பெற்று நிறைவு செய்கிறது.

அறுபத்து மூவர் குலவரிசை:

அந்தணர் பன்னிருவர், ஆதிசைவர் அறுவர், முடிஅரசர் அறுவர், குறுநில மன்னர் ஐவர், வேளாளர் பதின் மூவர், மரபுதெரியாதோர் அறுவர், ஏனையோர் குலத்துக்கு ஒருவராக பதின்மர். அவர்களாவார்: ஏகாலியர், குயவர். சாலியர், சான்றார். செக்கார், நுனையர், பாணர், புலையர் மாமாத்திரப் பிராமணர், வேடர். எனவே எல்லாச் சாதியரும், குலத்தவரும் நாயன்மார்களில் இடம்பெற்றுள்ளனர். ஆதலின் இந்நூல் எல்லோரையும் தழுவி எல்லோருக்கும் இறையருள் பெறுவதற்கு வாய்ப்புண்டு என்பதைத் தெளிவாக உணர்த்துவதைக் காணலாம்.

அறுபத்து மூவர் நாட்டு வரிசை:

சோழநாட்டினர் முப்பத்தொருவர், தொண்டை நாட்டினர் எழுவர், பாண்டி நாட்டினர் நால்வர். மலைநாட்டினர் இருவர். நடுநாட்டினர் எண்மர், கோநாட்டினர் ஒருவர் மழநாட்டினர் ஒருவர், நாடு குறிக்கப்படாதவர் ஒன்பதின்மர். பழம்பெரும் தமிழ்நாட்டில் கர்நாடகா தவிர ஏனைய நாடுகளில் நாயன்மார்கள் தோன்றி நாட்டின் பண்பாட்டை வளர்த்து விளக்கியுள்ளனர்.

உரைகண்டோர்:

இப்பன்னிரண்டாந் திருமுறையாகிய பெரியபுராணத்திற்கு உரை எழுதினோர் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத் தம்பிரான்களுள் ஒருவராகிய தவத்திரு ஆறுமுகத் தம்பிரான், கோவை சிவக்கவிமணி திரு.சி.கே. சுப்பிரமணிய முதலியார்