பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சேக்கிழார் செந்நெறி

உலகிற்கு அனுபவம் பொது, ஆனால் அந்த அனுபவத்தை யடையும் நெறிமுறைகள் பொதுவல்ல, அவரவர் இயல்புக்கு ஏற்றவாறு மாறுபடும். இயல்பை நினைவிற் கொள்ளாமல் இலட்சியங்களை ஆய்வு செய்யப் புகுவதும், அவ் இலட்சியங்களை அடையும் நெறிகளை ஆய்வு செய்யப் புகுவதும், அதனால் ஏற்பட்ட முடிபுகளே, முடிபுகள் என்பதும் நெறியல்ல. எதற்கும், அதற்கென்று அமையும் வகையுண்டு; வழியுண்டு; சாதாரணமான அன்றாட உலக வாழ்வியலுக்குக் கூட ஏற்றுக்கொள்ளப் பெற்ற வழிவகைகள் உண்டு என்றால் அறிவியலுக்கு அதற்கென்று உரிய தனிமுறை இருக்காதா, என்ன? அறிவியலுக்கே நியதியின் பாற்பட்ட வாய்பாடுகள் உண்டு; வழிகள் உண்டு வகைகள் உண்டு என்றால் அறிவியலிலும் முதிர்ந்த அருளியலுக்குச் சிறப்புடைய வாய்பாடுகளும் அமைந்து இருக்கத்தான்ே செய்யும்!

ஏன்? சாதாரணக் கதை - பாட்டி பேரனுக்குச் சொல்லும் கதை. கதை, கதையே தானா? அந்தக் கதைக்குக் கருத்து இல்லையா? அந்தக் கதை சொல்வதில் நோக்கமில்லையா? இவை அனைத்தும் எல்லாருக்கும் ஒரு மாதிரி