பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

199


தோன்றுமா? கையில் சோற்றை வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பூச்சாண்டியை நினைவூட்டுகிறாள் பாட்டி அவளுக்குக் குழந்தையைப் பயமுறுத்துதல் நோக்கமல்ல. சோற்றை ஊட்டுவதே நோக்கம். ஆனால், பாட்டியின் பகைவர்கள் குழந்தையைப் பயமுறுத்துகிறாள் என்று குற்றம் சொல்லலாம்.

உடல்நூல் வல்லார் ஒருவர் "தேங்காய் தின்பது உடலுக்கு நல்லது” என்று ஒரு சொற்பொழிவில் கூறினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் நேரே தேங்காய் விற்கும் கடைக்குச் சென்றான். அவன் தேங்காயை முன் பார்த்ததும் இல்லை; தின்றதும் இல்லை. ஆதலால் அவன், வழியில் சென்றவர்களைத் "தேங்காய் கடை எது?” என்று கேட்டுக்கொண்டு தேங்காய்க் கடைக்குச் சென்றான். அவன் சென்று சேர்ந்த தேங்காய்க் கடை மட்டையோடுள்ள தேங்காய் விற்கப்படும் கடை. காசு கொடுத்து தேங்காய் வாங்கினான். தேங்காய் தின்ன வேண்டுமென்ற ஆசையால் தனியிடம் தேடிச் சென்றான். அங்கிருந்தவாறே தேங்காயைக் கடித்துத் தின்ன முயன்றான். முடிவு பல் போயிற்று; செங்குருதி சிந்திற்று! சினம் கொண்டான். அறிஞர் கருத்தைப் பிழையெனத் துணிந்தான்். அவரை நாடிச் சென்று, அலறினான்! அவர் அமைதியாகத் தேங்காய் தின்னும் முறையை அறிந்துகொள்ளாமல் தேங்காய் தின்ன முயன்றது. தவறு என்று அவனை அமைதிப்படுத்தித் தேங்காய் தின்னும் நெறிமுறையை எடுத்துக் காட்டியதோடு, செய்துகாட்டி அவனுக்குத் தேங்காய்ச் சுவையைக் காட்டினார்.

இந்தக் கதைபோல்தான்் இன்று சிலர் நூல்களை ஆராய முற்படுகின்றார்கள். எழுதப்படிக்கத் தெரிந்தவர்க ளெல்லாம் நூலாராய்ச்சிக்குத் தகுதிவுடையவர்களாக முடியாது. அதுமட்டுமல்ல. ஒரு துறையில் துறைபோகக் கற்றவர்கள் பிறிதொரு துறையில் யாதும் அறியாதிருக்கலாம். அது தவறன்று. ஆனால், இந்த உண்மையை இன்று