பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

201


பொய்ம்மை நிறைந்த மூட நம்பிக்கை அறவே கூடாது. மதிப்பு என்பது வேறு மாறுபாடு என்பது வேறு விருப்பம் என்பது வேறு; வேறுபாடு என்பது வேறு. இவை தம்முள் முரண்பாடுகள் வளர்ச்சியடையாத-மானுடர் என்ற பெயரில் உலவும்-மாக்களிடத்திலேயே இருக்கும். தெளி வாகச் சொன்னால் சான்றோர்களிடத்தில் மாறுபாடுகள் ஏற்பட ஏற்பட மதிப்பு வளரும். அதற்குத் சான்றாண்மை என்று பெயர்.

தமிழகச் சமய, சமூக அமைப்பில் புராணங்களுக்கு நிறைந்த இடமுண்டு. இந்தப் புராணங்களை ஆதரித்தும் ஒர் அணி பிரசாரம் செய்து கொண்டு வருகிறது. எதிர்த்தும் ஓர் அணி பிரசாரம் செய்து கொண்டு வருகிறது. இவற்றில் பொதுமக்களாகிய நாம் அடையும் பாடு, திண்டாட்டமாகப் போகிறது.

சேக்கிழார், "மாக்கதை’ என்ற பெயரில் திருத் தொண்டர்கள் வரலாற்றைச் செந்தமிழில் செய்து தந்துள்ளார். அதனை வழக்கில் "பெரியபுராணம்" என்போம். இந்த நூலைக் கற்று, உணர்தல் எளிதன்று. பெரியபுராணம் இன்றைய சமுதாயத்தில் விவாதத்திற்குரிய பொருளாக மாறி வளர்ந்திருக்கிறது.

"பெரிய புராணத்தை எப்படி அணுகுவது?” வினாவிற்கு விடைகாணும் முயற்சியில் ஈடுபடுவோம். ஒன்று மட்டும் உறுதி. நம்முடைய நம்பிக்கைகளை மையமாக வைத்துச் சேக்கிழாரை நாம் அணுக மாட்டோம். பக்தியின் பெயரால் பெரிய புராணத்தை ஒற்றுத்தாள் மனோபாவத்தில் அணுகும் முயற்சியும் நாம் செய்யப் போவதில்லை. இந்த முயற்சியில் கிடைக்கும் விடைபற்றி மற்றவர்கள் எப்படி விமர்சிப்பார்கள் என்பது பற்றியும் கவலைப்பட வில்லை.

திருத்தொண்டர்கள் என்ற சொல் இனிய சொல்; கவர்ச்சி நிறைந்த வார்த்தை திருத்தொண்டர் யார்? இன்று