பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

207


மனையறத்திலும் துறவு உண்டு. துய்ப்பின் எய்ப்பில் தொடங்கும் துறவினும், துறவில் தொடங்கும் துய்ப்பு மிக உயர்ந்தது. துறவில் தொடங்கும் துய்ப்பின் மூலமே எய்ப்பினில் வைப்பாகிய இறைவனை அடையலாம். இத்தகைய சிறப்புடைய இல்வாழ்க்கையே அறம், பெயரளவில் நிகழ்வது பழிப்பை ஆக்கும் பொழுது போக்காகும்.

திருத்தொண்டர் புராணம் சுந்தரரில் தொடங்குகிறது. பழுத்த மனத்து அடியார்கள் பலரை அறிமுகப்படுத்துகிறது.

நாடு! - எது நாடு? சேக்கிழார் அமைச்சுப் பணி செய்தவர். நல்ல நாட்டைப் பற்றி அவர் ஒரு சித்திரமே தருகிறார். நாட்டில் நல்ல நீர்வளம் இருக்க வேண்டும். சோழநாட்டைக் காவிரி வளப்படுத்தி வாழ்விக்கிறது. பொன்னனைய கதிர்களைத் தருவதால் பொன்னி என்று காவிரி பெயர் பெற்றது. காவிரியின் ஆற்றொழுக்கு அன்னை பராசக்தியின் கருணை போன்றது. ஆம்! அன்னையின் கருணை அனைவரையும் காக்கும்! அதுபோல், சோழநாடு - அதனில் ஒரு பகுதியாகிய இன்றைய தஞ்சைத் தரணி கோடானு கோடி மக்களுக்கு உணவை வழங்குகிறது. உயிர்க் கொடை அளிக்கிறது. காவிரி நாட்டில் காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்போர் அன்றும் இல்லை! இன்றும் இல்லை! காவிரி நாடு முழுதும் கழனிகளில் சுறுசுறுப்பாகக் கடமைகள் நிகழும். உழுதசாலில் தெளிந்த சேற்றின் இழுது செய்யினுள் இந்திர தெய்வத்தைத் தொழுது நாற்று நடுவர் என்று சேக்கிழார் கூறுகிறார். உழுதசேறு, கட்டிகளற்றதாக நெய் இழுது போல இருந்தது என்று சேக்கிழார் கூறுவது காவிரி நாட்டு உழவர் திறம் காட்டுகிறது. அஃது இன்றைய உழவர்களுக்கொரு பாடம்.

கழனிகளில் கதிர்கள் விளைந்து கிடக்கின்றன. எங்ங்னம்: பக்தியென்பது முனைப்பை முற்றாக அழிப்பது.