பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"இளவரசன் ஊர்ந்து சென்றதோ நெடுந்தேர். அதாவது உயரிய தேர்: ஒலிக்கும் மணிகள் கட்டப்பெற்ற தேர்: எண்ணில் பல தேர்களும் படைகளும் சூழச் சென்றான் இளவரசன். தேரூர்ந்து சென்றதும் அரசுலாத்தெரு, இறந்தகன்று இளைய கன்று. தேர், கன்றின் மீது ஊர்ந்து செல்லவில்லை. கன்று தேரிடைப் புகுந்து இறந்தது” என்றார் அமைச்சர் அமைச்சரின் விளக்கம் நுண்ணறிவின் பாற்பட்டது. கன்று, இறந்து புட்டதற்கு வேறு யாரும் காரணமல்ல என்பதை இவ்வள்வு தெளிவாக விளக்க யாராலும் முடியாது.

ஊர்ந்த தேர், நெடுந்தேர். இளவரசன் தேரின் மீது அமர்ந்திருந்தான்். அதனால் தேரின் அடியில் என்ன நிகழ்கிறது என்பதைக் காணும் வாய்ப்பில்லை. தேர் ஒலிசெய் மணிகளால் ஒப்பனை செய்யப்பெற்றது. ஆதலால், தேர்ந் நகர்ந்த போது மணிகள் ஒலி செய்தன. எனவே இளங்கன்றின் குரலொலியும் கேட்க வாய்ப்பில்லை. தேர்களும் படைகளும் சூழ வந்ததால் மண்ணகம் அவற்றால் மூடப்பெற்று பருவத்தாலும் உருவத்தாலும் இளைய கன்று ஒன்று இடையிற் புகுந்ததைக் காணும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. தேரூர்ந்த வீதி, அரசுலா விதி. அங்குப் பசுவும் கன்றும் வர விதியும் இல்லை. மரபும் இல்லை. எதிர்பாராத ஒன்று. கன்றும் இளையது. விண்வறியது அது ஓடி வந்தது. தேர் தடம் மாறிக் கன்றின்மீது ஊரவில்லை. கன்றே தேரிடையிற் புகுந்தது. என்ன அற்புதமான சமாதான்ம் ! சட்டப்படி நூற்றுக்கு நூறு சரி! இன்றையச் சூழ்நிலை யானால் இளவரசன் குற்றமுடையவனல்லன். கன்றே குற்றமுடையது. கன்று இறந்துபட்டதால் கன்று தவறு செய்திடத்துணையாகத் தாய்ப்பசு இருந்ததாகத் கருதப் பெற்றுத் தாய்ப்பசுவுக்கும் தண்டனை வழங்கும் முறை கிடைத்தாலும் கிடைத்திருக்கும், கொஞ்சம் மனச்சாட்சி இருந்தால் தாய்ப்பசுவுக்குக் கொஞ்சம் தண்ணிரும்