பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகட்டுகிறது. இதுபோன்று எளிய இனிய அறங்களை நாயன்மார்கள் எப்படியெல்லாம் செய்துள்ளனர் என்பதைப் பலவகையாலும் எடுத்துக்காட்டி இனிதே நிறைகிறது. இந்நூல். இந் நல்லறங்களை மக்கட்கு எடுத்து இயம்பியதோடு நில்லாமல் தங்கள் ஆதீன அருளாட்சியில் உள்ள ஆலயங்களில் செயல்படுத்தவும் திட்டமிட்டு நடத்திக் காட்டியுள்ளமை போற்றுதற்குரிய செயலாகும்.

செந்தமிழ்க் காவலர்:

பேராசிரியர், பதிப்புச் செம்மல் திரு. மெய்யப்பன் மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாக எண்ணற்ற தமிழ்நூல்களை வெளியிட்டு, தமிழ்த்தாய்க்கு அணி சேர்த்து, தமிழ்மொழியை வளர்த்தும் காத்தும் வருகிறார். இதுகுறித்தே நிகழாண்டு ஆவணிமூலத் திருநாளில் செந்தமிழ்ச் சொக்கன் திருவருள் இவருக்கு “செந்தமிழ்க் காவலர்” என்னும் விருதளித்துப் பாராட்டியுள்ளது. இவர் தவத்திரு அடிகளாரின் அருளுரைகளைத் தொகுத்து பல நூல்கள் வெளியிட்டு வருகிறார். அவ்வரிசையில் “பெரியபுராணச் சொற் பொழிவுகள்” என்னும் இவ்வினிய நூலும் இடம்பெற்றுத் திகழ்கிறது. இவர்தொண்டு தொடர்ந்து சிறப்புறுவதாக, இவரும், இவர் தொண்டும் இந்நூலும் மக்களிடையே பரவிப் பயன்தர ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

        என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
        ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
        மன்றுளார் அடியா ரவர் வான்புகழ்
        நின்றதெங்கும் நிலவி உலகெலாம்.'


நாயன்மார் திருக்கூட்டம்
நாளும் வளர்ந்தோங்குக.