பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

223


தில்லை. ஆனால், அறமுடையார் போல பொய்ம்மை காட்டுவர். இவர்களைப் போற்றுவானேன்? புகழ்வானேன்? திருப்புகலூரில் எழுந்தருளியுள்ள எந்தை ஈசனைப் பாடுமின்! அவன் இப்பொழுதே உணவும் உடையும் கொடுப்பான்; இடர் கெடுத்தும் வாழலாம்; சிவலோகமும் ஆளலாம் என்று பாடுகின்றார்.

அன்பின் வழி அச்சம்

திருப்புகலூர் வழிபாட்டை முடித்துக் கொண்ட பின் சுந்தரரின் திருத்தலயாத்திரை தொடர்கிறது. பலதலங்களை வழிபட்டுக்கொண்டு வருகின்றர்ர். திருப்பாச்சிலாச்சிரமம் என்ற தலத்தை அடைகிறார். நம்பி பொருள் விரும்புகின்றார். சந்நிதியில் நின்று பொருள் இரந்து பாடுகின்றார். ஆனால், பொருள் கிடைக்கவில்லை. பொருள் எளிதில் கிடைக்குமா? அருமையில் கிடைத்தால்தான்் பொருளின் அருமைப் பாட்டினை அறிந்து கொள்வர். மேலும் கேட்டவுடனே பொருளினைக் கொடுத்து விட்டால், கொழிதமிழ்ப் பாட்டு தொடராதே! தமிழ் கேட்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பம் நிறைவேறாதே! அதுமட்டுமா? ஏசியும் பேசியும் தோழமை வளராதே! ஆதலால், திருப்பாச்சிலாச் சிரமத்து இறைவன் பொருள் வழங்குதலை நீட்டிக்கின்றான்; காலந்தாழ்த்துகின்றான். வருத்தம் மிகுந்து முறைப்பாடு செய்து கொள்ளும் எல்லை வரையில் சென்று விடுகின்றார். “எத்தனை அருளா தொழியினும் பிரானார் இவரலா தில்லையோ?” என்று பாடுகின்றார்.

பொதுவாக, உலகியலில் அன்பு இருக்குமிடத்தில் அச்சம் இருக்காது. அச்சம் உள்ள இடத்தில் அன்பு இருக்காது. ஆனால், சுந்தரர் வாழ்க்கையில் இவ்விரண்டும் கலந்திருந்தன என்பது ஒரு புதுமை, அன்பும் அச்சமும் கலந்தவர்கள் வாழ்க்கையில் அன்பின் வழியதான் அச்சம் இருக்கலாம் அல்லவா? அதாவது கொண்டுள்ள அன்பு