பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

225


வேற்றுமை காட்டுவது கூடாது. எப்போதும் ஒரே நிலையைப் பேணல் அறவாழ்க்கை அருள் வாழ்க்கை:

"பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில்
இவரலா தில்லையோ பிரானார்”

என்ற வாக்கினை அறிக.

அடுத்து, பழகுதற்கு இனிய நண்பராகத் தொண்டுழியம் செய்யும் பணிவிடையாக ஒருவர் இருத்தலே நன்று, பலர் இருந்தால் அந்த உறவினைப் பாதுகாத்தல் அரிது. உறவினைப் பேணி வளர்த்துக்கொள்ளும் செயல் முறைகளில் பரிந்து பேசுதல், உதவிகளைச் செய்தல் ஒருவகை. இத்தகு தோழமைச் செயல்கள் தோழர்கள் பலராயின் செய்தல் இயலாது. ஆதலால், அரிதாய் நட்புக்கொள்க! பெற்ற நட்பை தோழமையைப் பேணிக் காத்திடுக! என்பது ஆரூரர் வரலாற்றின் படிப்பினை!

ஆரூரரின் முறைப்பாடு பெருமானார்க்குத் தாங்க இயலாதது. ஆதலால், உடன் பொற்குவை வழங்கப் பெறுகிறது.

உலகெலாம் உய்ய உறுதியாம் பதிகம்

உலகியல் வாழ்வில் வளம் பொலியத் திருப்பாச்சிலாச் சிரமத்தில் பொன் முடிப்புப் பெற்ற ஆரூரர், தொடர்ந்து திருத்தலயாத்திரை செல்கின்றார். யாத்திரை சோழ நாட்டிலிருந்து கொங்கு நாட்டுக்குத் தொடர்கிறது.

கொங்கு நாட்டில் சுந்தரர் நெஞ்சு தங்கிப் பாடிய திருத்தலம் திருப்பாண்டிக் கொடுமுடி'. உடலியல் வாழ்க்கைக்குப் பொன் பெற்றாயிற்று. இனி என்ன கவலை? இந்தக் குறிப்பு யாத்திரையின் நடைமுறையிலும் தெரிவிக்கிறது. காவிரியின் வடகரையில் இருந்த நம்பி பொன் பெற்ற பிறகு, காவிரியைக் கடந்து தென் கரைக்குச் செல்கிறார். ஆம்! அருளார்ந்த வாழ்வியலுக்கு உலகியல் என்ற ஆறு கடக்கப்