பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




வெங்சமாக் கூடல் தலை நகரமாக விளங்கிய ஊர்: பழைய கோட்டைகளின் இடிபாடுகளை இன்றும் காணலாம். வெஞ்சமாக் கூடலில் சுந்தரர் அருளும் பதிகம் சுவையுடையது. பொருட் குறிப்புடையது. "வஞ்சியா தளிக்கும் வயலுடையது” கூடல் என்று பாடுகின்றார். இதனால் வெஞ்சமாக்கூடலின் மருத நிலவளம் - படுபயன் சிறப்பு அறியப்படுகிறது. வஞ்சியாதளிக்கும் வயலினை யுடைய ஊர்க்குத் தலைவனாகிய இறைவனும் வஞ்சியா தளிப்பான் என்பது கருத்து. இங்கு, சுந்தரர் மீண்டும் உறவு முறைப் பிணக்கில் ஈடுபடுகிறார்;

"வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்
வேண்டுதியே”

என்று வினவுகின்றார். சிவபெருமான் - சுந்தரர் இருவரும் ஒருவருக்கொருவர் தவிர்க்க முடியாத தேவையாகி வளர்ந்த வரலாறு, சுந்தரர் வரலாறு முழுதும் காணப்பெறுகிறது. சிவபெருமானுக்குச் சுந்தரரை நிகர்த்த பத்திமை நலம் மிக்கார் எங்குக் கிடைப்பர். பொன்னையும் பொருளையும் உகந்து, உண்டியையும் உடையையும் உகந்து ஒடித்திரியும் உலகில் புறத்தே போய்ப் பெறுவது எவன் என்று நிற்பார் யார்? சுந்தரருக்கும் சிவபெருமான் தேவை, ஆயினும் "அடியேனையும் வேண்டுதியே” என்று கேட்பதன் கருத்து ஐயத்தின் பாற்பட்டதன்று உறுதிப் படுத்தவேயாம்.

புறம்பயம் தொழப் புறப்படு, நெஞ்சமே!

சுந்தரர், வெஞ்சமாக்கூடலிலிருந்து திருப்பேரூரில் எழுத்தருளியிருக்கும் பட்டிப்பெருமானை வழிபட்டு, திருக்கற்குடி வந்திருக்க வேண்டும். ஆனால், பேரூர்ப் பதிகம் கிடைக்கவில்லை.

திருக்கற்குடி என்ற திருத்தலம், திருச்சிராப்பள்ளிக் கருகில் இருக்கிறது. வெஞ்சமாக்கூடலில் பெருமானுடன்