பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிர்வகிக்கும் முறைகளால் இறைவன் திருவுள்ளம் மகிழ நடந்து கொள்ள வேண்டும். பொன், ஆற்றில் இடப் பெறுகிறது. தண்ணிரில் நெடுந்தொலைவு வருவதால் பொன்னின் மாற்றுக் குறையலாம். அல்லது மற்றவர்களாலும் மாற்றுக்குறைய நேரிடலாம் அல்லவா? அதனால், மச்சம் வெட்டி வைத்துக்கொண்டாரே தவிர இறைவன் திருவருள் செயல்மீது ஐயப்பாடு கொண்டல்ல. இறைவனே கூட அவன் வழங்கிய பேறுகளை மக்கள் பயனுற - அளவாக மதித்துப் பயன்படுத்துதலிலேயே திருவுள்ளம் மகிழ்வான். ஆற்றில் இட்ட பொன்னுக்கு மச்சம் வெட்டிக் கொண்டது நம்பிக்கையின்மையின் பாற்பட்ட செயல் அல்ல. இது உலகியல் வாழ்வியல்.

ஆற்றில் போடு: குளத்தில் எடு!

அடியேற்கு அங்கே!

இறைவன் மனத்துள் நிற்கும் கருத்தறிந்து முடிப்பவ னாயிற்றே! ஆரூரருக்குப் பொன் வழங்கப் பெறுகிறது. ஒன்றல்ல; இரண்டல்ல! பன்னிரண்டாயிரம் பொன் வழங்கப் பெறுகிறது. ஆரூரருக்கு அளவற்ற மகிழ்ச்சி! ஆயினும் விண்ணப்பம் தொடர்கிறது. என்ன விண்ணப்பம்? உரிமையால் இறைவனை மேலும் அண்மித்து நின்று விண்ணப்பிக்கின்றார். நீ அருளிச் செய்த பொற்குவியலை, நீயே ஆரூருக்குக் கொண்டுவந்து தரவேண்டும் என்பது கோரிக்கை "அடியேற்கு அங்கே என்கிறார். அங்கே என்ற சொல்லில் பல நயங்களும் வாழ்வியல் உண்மைகளும் பொதிந்து கிடக்கின்றன. ஒரிடத்தின் பெயரைச் சொல்லாமல் "அங்கே என்றால் அதில் ஏதோ மறைவு இருக்கிறது. பலர் அறியக் கூடாத-அறிய வேண்டாத மறைவு! ஒத்த-நெருக்க மான இருவருக்கிடையில் தான்் இங்ங்னம் மறைபொருளாக இடங்குறித்துப் பேசப்பெறும். இருவருக்கும் அது அறிந்த